தூக்கத்திற்கு அதிக முக்கியத்துவம்.. அதிக நேரம் தூங்கும் மக்களை கொண்ட நாடுகள்.. இந்தியாவிற்கு எந்த இடம்? லிஸ்ட்!
ஒரு மனிதனின் ஆரோக்கியத்தை நிர்ணயிப்பது நல்ல உணவு, ஆரோக்கியமான தூக்கம். அப்படியான தூக்கத்தை தொலைத்து பலரும் வேலை, வேலை என ஓடிக்கொண்டிருக்கின்றனர். சிலர் இரவு முழுவதும் செல்போனில் மூழ்கிக் கிடக்கின்றனர். இப்படியான சூழ்நிலையில் அதிக நேரம் தூங்கும் மக்களை கொண்ட நாடுகள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
அதிக நேரம் தூங்கும் மக்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தில் ருமேனியா உள்ளது. ருமேனிய மக்கள் சராசரியாக 8.30-9 மணிநேரம் தூங்குவதாக கூறப்படுகிறது.
அதிக நேரம் தூங்கும் மக்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் இரண்டாம் இடத்தில் நியூசிலாந்து உள்ளது. நியூசிலாந்து மக்கள் சராசரியாக 8 மணிநேரம் தூங்குவதாக கூறப்படுகிறது.
அதிக நேரம் தூங்கும் மக்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் மூன்றாம் இடத்தில் ஆஸ்திரேலியா உள்ளது. ஆஸ்திரேலிய மக்கள் சராசரியாக 7.30-8 மணிநேரம் தூங்குவதாகவும், காலை 7.13 மணிக்கு தான் பெரும்பாலானோர் எழுந்திருப்பதாக கூறப்படுகிறது.
அதிக நேரம் தூங்கும் மக்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் நான்காம் இடத்தில் கொலம்பியா உள்ளது. கொலம்பியா மக்கள் சராசரியாக 6-7 மணிநேரம் தூங்குவதாக கூறப்படுகிறது.
டாப் 10 பட்டியலில் இந்தியாவிற்கு இடம் இல்லை. இந்திய மக்களின் சராசரியான தூக்கம் 7 மணிநேரத்திற்கு குறைவாகவே உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இந்தியர்களின் தூக்கம் தரம் குறைவாகவே இருப்பதாகவும் கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications