இந்தியாவில் உள்ள கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள்.. என்னென்ன? தமிழ்நாட்டில் எத்தனை உள்ளது? சுவாரசிய லிஸ்ட்!
இந்தியாவில் உள்ள கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்கள் என்னென்ன? தமிழ்நாட்டில் எத்தனை சுத்திகரிப்பு நிறுவனங்கள் உள்ளன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
இந்தியாவில் உள்ள கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனங்களில் ஒன்று இந்தியன் ஆயில் நிறுவனம். ஹரியானாவில் உள்ள பானிபட் மற்றும் ஒடிசா மாநிலத்தில் உள்ள பாரதீப் ஆகிய இரு இடங்களில் சுத்திகரிப்பு நிலையம் வைத்துள்ளது. ஒவ்வொரு நிலையத்திலும் நாள் ஒன்றுக்கு 3 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் உள்ள மற்றொரு கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம் பாரத் பெட்ரோலியம். மும்பை மற்றும் கொச்சி ஆகிய இரு இடங்களில் சுத்திகரிப்பு நிலையம் வைத்துள்ளது. கொச்சியில் நாள் ஒன்றுக்கு நாள் ஒன்றுக்கு 3 லட்சத்து 10 ஆயிரம் பேரல் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு செய்யப்படுகிறது. அதேபோல் மும்பையில் 2 லட்சத்து 40 ஆயிரம் பேரல் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் உள்ள மற்றொரு கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம் ஹிந்துஸ்தான் பெட்ரோலியம். மும்பை மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய இரு இடங்களில் சுத்திகரிப்பு நிலையம் வைத்துள்ளது. ஒவ்வொரு நிலையத்திலும் நாள் ஒன்றுக்கு 3 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம் இந்தியாவின் முதன்மை கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமாக உள்ளது. ஜாம்நகரில் உள்ள ரிலையன்ஸ் நிறுவனத்தின் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம் உலகின் மிகப்பெரிய சுத்திகரிப்பு நிறுவனமாக உள்ளது. நாள் ஒன்று 1 கோடியே 24 லட்சம் பேரல் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு செய்யப்படுவதாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் உள்ள முதன்மை கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட். சென்னை மணலியில் உள்ள இந்த நிறுவனம் நாள் ஒன்றுக்கு 2 லட்சத்து 10 ஆயிரம் பேரல் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு செய்யப்படுவதாக கூறப்படுகிறது. தென்னிந்தியாவின் எரிபொருள் தேவைக்கு CPCL நிறுவனம் முக்கிய பங்குவகிக்கிறது.
CPCL-யின் மற்றொரு கிளை நாகப்பட்டினத்தில் அமைத்துள்ளது. இது ஒரு சிறிய சுத்திகரிப்பு நிறுவனமாகும். நாள் ஒன்றுக்கு 1 லட்சத்து 80 ஆயிரம் பேரல் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு செய்யப்படுவதாக கூறப்படுகிறது
இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனமாக நயரா நிறுவனம் உள்ளது. குஜராத்தில் அமைத்துள்ள இந்நிறுவனம் நாள் ஒன்றுக்கு 4 லட்சத்து 5 ஆயிரம் பேரல் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு செய்யப்படுவதாக கூறப்படுகிறது


Click it and Unblock the Notifications