தமிழ் சினிமாவின் இரு ஜாம்பவான்களை இயக்கப்போகும் நெல்சன்.. இதற்கு முன் இயக்கிய படங்களின் வசூல் என்ன?
ரஜினி கமல் இணைந்து நடிக்கும் புதிய படத்தை இயக்குநர் நெல்சன் இயக்கவுள்ளார். அனிருத் இசையமைக்கவுள்ளார். நெல்சன் மீதான எதிர்பார்ப்பு பலமடங்கு எகிறியுள்ள நிலையில் இதற்கு முன் நெல்சன் இயக்கத்தில் வெளிவந்த படம் செய்த வசூல் எவ்வளவு என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
நெல்சன் இயக்குனராக அறிமுகமான படம் 'கோலமாவு கோகிலா'. யோகி பாபு, நயன்தாரா நடிப்பில் வெளிவந்த அப்படம், போதை பொருள் கடத்தலை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படமாகும். காமெடி, த்ரில், ஆக்ஷன் என படம் செம வரவேற்பு கிடைக்க கலெக்ஷனும் அள்ளியது. அதன்படி 73 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்த 'கோலமாவு கோகிலா' நெல்சனுக்கு ஹிட் படமாக மாறியது.
முதல் படம் செம ஹிட்டானதை தொடர்ந்து இரண்டாவது படம் நண்பர் சிவகார்த்திகேயனுடன் கூட்டணி அமைத்து 'டாக்டர்' படத்தை இயக்கினார். முழுக்க முழுக்க டார்க் காமெடி மற்றும் த்ரில் காட்சிகள் நிறைந்த இப்படம் வேற லெவல் ஹிட். உலகளவில் சுமார் 101.90 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸ் ஹிட் கொடுத்தார்.
இரண்டு ஹிட் படங்களை தொடர்ந்து மூன்றாவதாக ஸ்டார் நடிகருடன் கூட்டணி அமைத்தார். விஜய், பூஜா ஹெக்டே வைத்து 'பீஸ்ட்' படத்தை இயக்கிய நெல்சனின் மூன்றாவது படம் மிஸ் ஆனது. விமர்சனத்தில் செம அடி வாங்கிய 'பீஸ்ட்' வசூலில் நெல்சன் பெயரை காப்பாற்றியது. 235.90 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்தது.
மூன்றாவது படம் ஃபிளாப் ஆனதை தொடர்ந்து நான்காவது படம் சூப்பர் ஸ்டாருடன் கைகோர்த்தார் நெல்சன். பீஸ்ட் பட தோல்வியால் தயக்கத்துடன் தொடங்கிய பேச்சுவார்த்தை பின்னர் மெகா ஹிட்டானது. ரஜினி நடிப்பில் நெல்சன் இயக்கிய ஜெயிலர் உலகளவில் மெகா ஹிட்டானது. 630 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் வேட்டை நடத்தியது. கம்பேக் கொடுத்த நெல்சன், ரஜினியை வைத்து மீண்டும் 'ஜெயிலர் 2' படத்தை இயக்கி வருகிறார்.
ஜெயிலர் 2 ஷூட்டிங் ஒருபக்கம் இருக்க மற்றொரு பக்கம் கமல் ரஜினி கூட்டணி எதிர்பார்ப்புடன் உருவாகத் தொடங்கியது. ஆனால் இயக்குநர் தான் செட் ஆகாமல் இருந்து வந்தது. இயக்குநர்கள் கமிட்டாவதும் வெளியேறுவதுமாக இருந்த நிலையில் குறுக்க இந்த கெஷிக் வந்தால் என்பது போல் நெல்சன் என்ட்ரி கொடுத்து ரஜனி-கமல் கூட்டணியை இயக்கவுள்ளார். வழக்கம் போல் அனிருத் இசையமைக்கவுள்ளார். ஜெயிலர் வசூல் 600 கோடியை தாண்டிய நிலையில் இனி வரும் நெல்சன் படங்கள் ரூ.1000 கோடியை தொடுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications