உலகளவில் அதிக வசூல் செய்த பயோபிக் திரைப்படங்கள்.. 'மைக்கேல்' பட கலெக்ஷன் என்ன? லிஸ்ட்!
உலகளவில் மாபெரும் வசூல் சாதனை படைத்த பயோபிக் திரைப்படங்கள் என்னென்ன? அதன் வசூல் என்ன? இந்த பட்டியலில் இந்திய திரைப்படங்கள் உள்ளதா? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
2018ல் ஹிந்தியில் வெளிவந்த பயோபிக் திரைப்படங்கள் 'Sanju'. பாலிவுட் சினிமாவின் பிரபல நடிகர் சஞ்சய் தத் பற்றிய திரைப்படமாகும். ஆரம்ப கால திரை வாழ்க்கை, சிறை தண்டைனை ஆகியவற்றை கூறும் பயோபிக் படமாகும். இப்படம் உலகளவில் 588 கோடி ரூபாய் வசூல் செய்து இந்த பட்டியலில் 7ம் இடத்தை பிடித்துள்ளது.
2024ல் வெளிவந்த பயோபிக் திரைப்படம் 'Bob Marley: One Love'. உலக பிரபலமான பாப் பாடகர் பாப் மார்லியின் வாழ்க்கை வரலாற்று திரைப்படமாகும். இப்படம் உலகளவில் 1,260 கோடி ரூபாய் வசூல் செய்து இந்த பட்டியலில் 6ம் இடத்தை பிடித்துள்ளது.
2015ல் வெளிவந்த பயோபிக் திரைப்படம் 'Straight Outta Compton'. அமெரிக்காவின் மிக பிரபலமான ராப் இசை குழு பற்றிய உண்மை கதைக்களம். உலகளவில் 1,699 கோடி ரூபாய் வசூல் செய்து இந்த பட்டியலில் 5ம் இடத்தை பிடித்துள்ளது.
அமீர் கான் நடிப்பில் 2016ல் வெளிவந்த ஹிந்தி திரைப்படம் 'Dangal'. மல்யுத்த வீரர் பற்றிய உண்மை கதைக்களம். இந்த பயோபிக் திரைப்படம் உலகளவில் 2,024 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை படைத்தது. மேலும் இந்தியாவில் அதிகம் வசூல் செய்த படமாகவும் முதல் இடத்தில உள்ளது. இந்த பட்டியலில் 4ம் இடத்தை பிடித்துள்ளது.
உலக பிரபலமான பாப் இசை கலைஞர் மைக்கேல் ஜாக்சன் பற்றிய பயோபிக் திரைப்படம் 'மைக்கேல்'. சமீபத்தில் வெளியான இப்படம், இதுவரை உலகளவில் 5,500 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது வருகிறது. மேலும் வசூல் வேட்டையில் நடத்தி வரும் இப்படம், இந்த பட்டியலில் 3ம் இடத்தை பிடித்துள்ளது.
2018ல் வெளிவந்த பயோபிக் திரைப்படம் 'Bohemian Rhapsody'. பிரபல இசை கலைஞர் ஃப்ரெடி மெர்குரி பற்றிய பயோபிக் திரைப்படமாகும். உலகளவில் 7,651 கோடி ரூபாய் வசூல் செய்து இந்த பட்டியலில் 2ம் இடத்தை பிடித்துள்ளது.
இறுதியாக, உலகளவில் அதிக வசூல் செய்த பயோபிக் திரைப்படமாக 'Oppenheimer' திரைப்படம் உள்ளது. அணுஆயுதத்தை உருவாக்கிய அமெரிக்க விஞ்ஞானி ராபர்ட் ஓபன்ஹெய்மர் பற்றிய பயோபிக் திரைப்படமாகும். உலகளவில் 8,182 கோடி ரூபாய் வசூல் செய்து உலக சாதனை படைத்த இப்படம், இந்த பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது.


Click it and Unblock the Notifications