OTT: இந்த வாரம் ஓடிடியில் வெளியான மெகா ஹிட் திரைப்படங்கள்.. என்னென்ன?
தியேட்டரில் ஹிட்டான திரைப்படங்கள் இந்த வாரம் ஓடிடியில் ரிலீசாகவியுள்ளது. என்னென்ன படம்? எந்த ஓடிடி? வாங்க பார்ப்போம்.
மோகன்லால் நடிப்பில் மலையாளத்தில் வெளிவந்த மெகா ஹிட் திரைப்படம் 'த்ரிஷ்யம் 3'. சஸ்பென்ஸ், ட்விஸ்ட் காட்சிகள் நிறைந்த இந்த சூப்பர் ஹிட் படம் ஜூன் 18ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது.
2024இல் இருந்து ஒளிபரப்பாகி வரும் சூப்பர் ஹிட் வெப் தொடர் 'The Agency'. ஸ்பை, திரில்லர் கதைக்களத்தில் வெளிவந்த இந்த முதல் சீசன் அமோக வரவேற்பு பெற்றது. அதனை தொடர்ந்து பெரும் எதிர்பார்ப்புடன் இரண்டாவது சீசன் வரும் ஜூன் 21ம் தேதி அமேசான் பிரைம் தளத்தில் ரிலீசாகவுள்ளது.
யோகி பாபு நடிப்பில் தியேட்டரில் ரிலீசான ஹிட் திரைப்படம் 'கெணத்த காணோம்'. தண்ணீர் இன்றி தள்ளாடும் குக் கிராமத்தில் டைனசோர் எலும்புக்கூடு கிடைக்க என்ன ஆனது? தண்ணீர் கிடைக்க கிராம மக்கள் என்ன செய்தனர்? என்பதே படம். இப்படம் ஜூன் 16ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீசானது.
2024இல் இருந்து ஒளிபரப்பாகி வரும் ரொமான்டிக் ஹிந்தி வெப் தொடர் 'Thukra Ke Mera Pyaar'. இத்தொடரின் முதல் சீசன் ஓடிடி பிரியர்களை அதிகம் ஈர்த்த நிலையில் இரண்டாவது சீசன் இன்று ஜூன் 19ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீஸாகியுள்ளது.
ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் கடந்தாண்டு வெளிவந்த மெகா ஹிட் ஹாலிவுட் திரைப்படம் 'Avatar: Fire and Ash'. மாபெரும் வசூல் சாதனை படைத்த இப்படம், வரும் ஜூன் 24ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.


Click it and Unblock the Notifications