இந்தியளவில் அதிக திரைப்படங்களில் நடித்த நடிகர்கள்.. யாரெல்லாம் தெரியுமா? லிஸ்டில் ஒரே ஒரு தமிழ் நடிகர்?
இந்திய சினிமா எத்தனையோ நடிகர், நடிகைகளை கண்டுள்ளது. ஆனால் அதில் சிலர் மட்டுமே ஹாலிவுட் நடிகர்களுக்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு மிகவும் திறமையானவர்களாக மக்களால் அதிகம் கொண்டாடப்பட்ட நடிகர்களாக ஜொலிக்கின்றனர். அப்படியான மிகவும் திறமையான நடிகர்கள் தங்களின் படங்களில் கண்டிப்பா இருந்தே ஆகவேண்டும் என்பதே தயாரிப்பாளர்கள், இயக்குனர்களின் விருப்பமாக இருக்கும். அப்படியாக எண்ணற்ற படங்களில் அசாத்திய நடிப்பினை வெளிப்படுத்தி ஜொலித்த நடிகர்கள் சிலரே. அந்த வகையில் இந்தியளவில் அதிக திரைப்படங்கள் நடித்த நடிகர்கள் யாரெல்லாம் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
இந்தியளவில் அதிக திரைப்படங்களில் நடித்த நடிகர்களின் பட்டியலில் முதல் இடத்தில் நடிகை சுகுமாரி உள்ளார். தனது 10 வயதில் திரை பயணத்தை தொடங்கிய இவர், எம்ஜிஆர் முதல் விஜய் வரை பல சூப்பர் ஸ்டார்களுடன் நடித்துள்ளார். தமிழ் உட்பட மொத்தம் 9 மொழிகளில் 2500க்கும் அதிகமாக திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்தியளவில் அதிக திரைப்படங்களில் நடித்த நடிகர்களின் பட்டியலில் இரண்டாம் இடத்தில் நடிகை மனோரமா உள்ளார். 12வது வயதில் நாடகம் மூலம் தனது திரை பயணத்தை தொடங்கிய இவர், 1937ம் ஆண்டு சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். அனைவரையும் சிரிக்கவைத்த இவர், 2015ம் ஆண்டு மரணித்தார். தமிழில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்த இவர், 1500க்கும் அதிகமாக திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்தியளவில் அதிக திரைப்படங்களில் நடித்த நடிகர்களின் பட்டியலில் மூன்றாம் இடத்தில் நடிகர் ஜெகதி ஸ்ரீகுமார் உள்ளார். மலையாள காமெடி நடிகரான இவர், மொத்தம் 1500க்கும் அதிகமாக திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்தியளவில் அதிக திரைப்படங்களில் நடித்த நடிகர்களின் பட்டியலில் நான்காம் இடத்தில் நடிகர் பிரம்மானந்தம் உள்ளார். தமிழ், கன்னடம், ஹிந்தி என பல மொழி படங்களில் நடித்த காமெடி நடிகரான பிரம்மானந்தம் சுமார் 1100க்கும் அதிகமாக திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் இந்திய காமெடி நடிகர்களில் நம்பர் ஒன் காமெடி நகராக இருந்து வருகிறார்.
இந்தியளவில் அதிக திரைப்படங்களில் நடித்த நடிகர்களின் பட்டியலில் ஐந்தாம் இடத்தில் நடிகர் சக்தி கபூர் உள்ளார். பாலிவுட் நடிகரான இவர், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என மொத்தம் 700க்கும் அதிகமாக திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்தியளவில் அதிக திரைப்படங்களில் நடித்த நடிகர்களின் பட்டியலில் ஆறாம் இடத்தில் நடிகர் அனுபம் கேர் உள்ளார். பாலிவுட் நடிகரான இவர், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் மொத்தம் 540க்கும் அதிகமாக திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்தியளவில் அதிக திரைப்படங்களில் நடித்த நடிகர்களின் பட்டியலில் ஏழாம் இடத்தில் நடிகர் மம்மூட்டி உள்ளார். மலையாள நடிகரான இவர், மொத்தம் 450க்கும் அதிகமாக திரைப்படங்களில் நடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications