ஐட்டம் பாடலுக்கு அதிக சம்பளம் வாங்கிய நடிகைகளின் லிஸ்ட்.. நம்பர் ஒன் யாருன்னு பாத்தீங்களா?
அன்று முதல் இன்று வரை நம் மக்களிடையே ஐட்டம் பாடலுக்கான மவுசு கொஞ்சமும் குறையவில்லை. குத்துப்பாட்டுக்கு கவர்ச்சி நடனம் ஆடும் நடிகைகளை ரசிப்பதற்காகவே தியேட்டருக்கு வரும் கூட்டம் உள்ளது. முன்பெல்லாம் மார்க்கெட் இழந்த நடிகைகள் தான் ஐட்டம் பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடிவந்தனர். ஆனால், தற்போது ஸ்டார் நடிகைகளே ஐட்டம் பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆட ஆசைப்படுகின்றனர். காரணம், ஒரு படத்தில் நடித்து கிடைக்கும் சம்பளத்தை விட ஒரே பாடலில் கவர்ச்சி நடனம் ஆடுவதால் கிடைக்கும் சம்பளம் மிக மிக அதிகம். இதனாலே என்னவோ ஸ்டார் நடிகைகள் ஐட்டம் பாடலுக்கு கவர்ச்சி நடனமாட விருப்பம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ஐட்டம் பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடி கோடிகளில் சம்பளம் வாங்கிய நடிகைகள் யார் யார் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
மலேகா அரோரா: பாலிவுட் சினிமாவின் ஸ்டார் நடிகையவகவும், கவர்ச்சி நடன புயலாகவும் வலம் வருபவர் நடிகை மலேகா அரோரா. ஷாருக்கானின் 'தக்க தையா' பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடி தனது திரை பயணத்தை தொடங்கிய மலேகா, ஏராளமான ஐட்டம் பாடலுக்கு கவர்ச்சி நடனம் ஆடி அசத்தியுள்ளார். தற்போது 50+ வயதாகியும் 20+ எனர்ஜியுடன் இன்றும் ஐட்டம் பாடலுக்கு கவர்ச்சி நடனமாடி ஆசாத்திவருகிறார். இவர் ஒரு ஐட்டம் பாடலுக்கு நடனமாட சுமார் 50 லட்சம் முதல் 1 கோடி ரூபாய் வரை சம்பளம் பெறுகிறார்.
தமன்னா: தென்னிந்தியாவின் ஸ்டார் நடிகையாக வலம் வந்துகொண்டிக்ரும் நடிகை தமன்னா, ரஜினியின் 'ஜெயிலர்' படத்தில் "காவாலா" பாடலுக்கு கவர்ச்சி நடனமாடி அசத்தினார். இன்ஸ்டாகிராம் முழுவதும் தமன்னாவின் காவாலா பாடல் தான் செம ட்ரெண்டிங்கில் வலம் வந்தது. காவாலா பாடலில் நடனமாக 1 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளார்.
கரீனா கபூர்: பாலிவுட் சினிமாவின் ஸ்டார் நடிகை கரீனா கபூர், 'Fevicol Se' என்ற ஐட்டம் பாடலுக்கு கவர்ச்சி நடனமாட சுமார் 1.5 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளார். அதுமட்டுமல்லாமல் வெவ்வேறு ஹிந்தி ஐட்டம் பாடலுக்கு கவர்ச்சி நடனமாடி கோடிகளில் சம்பளம் பெற்றுள்ளார்.
நோரா ஃபதேஹி: பாலிவுட் திரையுலகில் முன்னணி நடன புயலாக வலம் வருபவர் நோரா ஃபதேஹி. இவர் படங்களில் நடிப்பதை காட்டிலும் கவர்ச்சி நடனம் ஆடுவதில் அதிக ஆர்வம் கொண்டவர். ஆல்பம் பாடலுக்கு ஹடோ டான்ஸ் ஆடுவது, கான்செர்ட் நடத்துவது என நடனத்தில் அவ்வளவு பிரியம். நோரா ஃபதேஹி ஒரு பாடலுக்கு கவர்ச்சி நடனமாட சுமார் 2 கோடி ரூபாய் வரை சம்பளம் பெற்றுள்ளார்.
சமந்தா: இந்த லிஸ்டில் முதல் இடத்தை பிடித்துள்ளது பலரின் ஃபேவரைட் நடிகை சமந்தா தான். ஹீரோயினாக வலம் வந்துகொண்டிருந்த சமந்தா, திடீரென புஷ்பா படத்தில் கவர்ச்சி நடனமாடி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தினார். "ஓ அண்டவா மாமா" பாடலுக்கு கவர்ச்சி நடனமாடி ரசிகர்களை குஷிப்படுத்தினார். அப்பாடலில் கவர்ச்சி நடனமாட சுமார் 5 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளார். ஆனால் அப்படத்தின் ஹீரோயினாக நடித்த ராஷ்மிகாவுக்கு வெறும் 3 கோடி ரூபாய் தான் சம்பளம் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications