கடனில் மூழ்கி சேவையை நிறுத்திய இந்திய விமான நிறுவனங்கள்.. என்னென்ன தெரியுமா?
கடனில் மூழ்கி தனது சேவையை நிறுத்திய இந்திய விமான நிறுவனங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
2003ல் தனது சேவையை தொடங்கிய விமான நிறுவனம் கிங்ஃபிஷர் ஏர்லைன்ஸ். நிதி பற்றாக்குறை, கடன் சுமையால் தனது சேவையை தொடர முடியாததால் 2012ல் நிறுவனத்தை இழுத்து மூடியது.
1993ல் தனது சேவையை தொடங்கிய விமான நிறுவனம் ஜெட் ஏர்வேஸ். உள்நாடு, வெளிநாடுகளில் சேவையை வழங்கிய அந்நிறுவனம் 2018 முதல் கடனில் தத்தளிக்கத் தொடங்கியது. கடனில் மூழ்கிய ஜெட் ஏர்வேஸ் தனது சேவையை தொடர்ந்து நடத்த முடியாததால் 2019ல் நிறுவனத்தை இழுத்து மூடியது.
2005ல் 'கோ ஏர்' என்ற பெயருடன் விமான சேவையை தொடங்கி 2021ல் 'கோ ஃபர்ஸ்ட்' என்று பெயர் மாற்றி சேவையை தொடங்கியது. 2022ம் ஆண்டு கடனில் தள்ளாடத் தொடங்கிய கோ ஃபர்ஸ்ட், 2023ல் திவாலாகி சேவையை நிறுத்தியது.
1997ல் தனது சேவையை தொடங்கிய விமான நிறுவனம் ஏர் டெக்கான் ஏர்லைன்ஸ். வெற்றிகரமாக தனது சேவையை நடத்தி வந்த ஏர் டெக்கானின் பங்குகள் 2007ல் கிங்ஃபிஷர் நிறுவனத்தால் நிறுவனத்தால் வாங்கப்பட்டது. பின்னர் கொரோனா காலகட்டத்தில் டெக்கான் நிறுவனம் தனது சேவையை நிறுத்திக்கொண்டது.
2005ல் தனது சேவையை தொடங்கிய விமான நிறுவனம் பாரமவுண்ட் ஏர்வேஸ். கடன் சுமையால் தனது சேவையை தொடர முடியாததால் 2010ல் அனைத்து விமான சேவைகளும் நிறுத்தப்பட்டது.


Click it and Unblock the Notifications