தியேட்டரில் ரிலீசாகவுள்ள 'ஜுராசிக் வொர்ல்டு ரீபெர்த்'.. இதற்கு முன் பார்க்கவேண்டிய ஜுராசிக் படங்கள்.. எந்த ஓடிடியில் பார்க்கலாம்?
பூமியில் பல நூறு ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த உயிரினமான டைனோசர்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ஹாலிவுட் திரைப்படம் ஜுராசிக் பார்க். 1993ம் ஆண்டு வெளியான இப்படம் உலகளவில் மாபெரும் வெற்றி பெற்றது. அதன் தொடர்ச்சியாக வெவ்வேறு டைனோசர் திரைப்படங்கள் வெளியாகி அனைத்தும் மெகா ஹிட்டாகின. ஜுராசிக் வொர்ல்டு படத்தின் தொடர்ச்சியாக தற்போது "'ஜுராசிக் வொர்ல்டு ரீபெர்த்" நாளை உலகம் முழுவதும் தியேட்டர்களில் பெரும் எதிர்பார்ப்புடன் வெளியாகவுள்ளது. அந்த வகையில் அப்படத்தை தியேட்டரில் பார்ப்பதற்கு முன் பார்க்கவேண்டிய ஜுராசிக் படங்கள் என்னென்ன? எந்த ஓடிடியில் பார்க்கலாம் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
டைனோசர்களை வைத்து முதன் முதலில் வெளியான திரைப்படம் Jurassic Park. 1993ம் ஆண்டு வெளியான இப்படம் உலகளவில் மெகா ஹிட்டானது. இப்படத்தை ஜீ5 மற்றும் அமேசான் பிரைம் தளத்தில் காணலாம்.
இரண்டாவது பாகமாக வெளியான திரைப்படம் The Lost World: Jurassic Park. 1997ம் ஆண்டு வெளியான இப்படத்தை அமேசான் பிரைம் மற்றும் நெட்பிளிக்ஸ் தளத்தில் காணலாம்.
மூன்றாவது பாகமாக உலகளவில் வெளியான திரைப்படம் Jurassic Park 3. முதல் இரண்டு பாகத்தின் தொடர்ச்சியாக 2001ல் வெளியான இப்படம் வசூலில் மெகா ஹிட்டானது. இப்படத்தை ஜீ5 மற்றும் அமேசான் பிரைம் தளத்தில் காணலாம்.
14 வருடங்களுக்கு பின் 2015ல் வெளியான டைனோசர் திரைப்படம் Jurassic World. இந்த சூப்பர் ஹிட் படத்தை ஜீ5 மற்றும் அமேசான் பிரைம் தளத்தில் காணலாம்.
2018ல் வெளியான திரைப்படம் Jurassic World Fallen Kingdom. வழக்கம் போல் சூப்பர் ஹிட்டான இப்படத்தை ஜீ5 மற்றும் அமேசான் பிரைம் தளத்தில் காணலாம்.
இறுதியாக, 2022ல் வெளியான திரைப்படம் Jurassic World Dominion. இப்படத்தை ஜீ5 மற்றும் அமேசான் பிரைம் தளத்தில் காணலாம். இதனை தொடர்ந்து தற்போது ஜுராசிக் வொர்ல்டு ரீபெர்த் நாளை உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.


Click it and Unblock the Notifications