Home / Photos
தமிழ் நடிகர்கள் ஃப்ரீ டைம்ல" என்ன பண்ணுவாங்க தெரியுமா? வாங்க பார்ப்போம்!
By Chandru
நடிகர், நடிகைகளின் சொத்து விபரங்கள், என்னென்ன கார்கள், அவர்களின் வீடு உள்ளிட்டவற்றை தெரிந்துகொள்வதில் அனைவருக்கும் ஆர்வம் இருக்கும். இன்னும் சொல்லப்போனால் நடிகர்களின் தனிப்பட்ட வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை தெரிந்துகொள்வதில் பெரும்பாலானோருக்கு ஆர்வம் உண்டு. அந்த வகையில் எப்போதும் ஷூட்டிங் ஷூட்டிங் என பிஸியாக இருக்கும் நடிகர்கள் தங்களின் ஃப்ரீ டைம்ல் என்ன செய்வார்கள்? அவர்களின் பொழுதுபோக்கு என்ன? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/8
Photo Credit: filmibeat
Share
நடிப்பு அரக்கன் என்று ரசிகர்களால் கொண்டாடப்படுபவர் நடிகர் விக்ரம். கதாபாத்திரத்திற்காக மிகவும் மெனக்கிட்டு உடலை வருத்திக்கொள்பவர். ஸ்டார் நடிகரான இவர் போட்டோகிராபியில் அதிக ஆர்வம் கொண்டவர். தனது ஃப்ரீ டைம்ல் போட்டோகிராபி மற்றும் போட்டோஷூட் செய்வதே இவரின் பொழுதுபோக்காகும்.
2/8
Photo Credit: filmibeat
Share
அஜித்துக்கு வில்லனாக நடித்து தமிழ் சினிமாவில் வேற லெவல் கம் பேக் கொடுத்தவர் நடிகர் அருண் விஜய். ஃபிட்னெஸில் அதிக ஆர்வம் கொண்ட இவர் ஒருநாள் கூட உடற்பயிற்சி செய்யாமல் இருக்கமாட்டாராம். இவர் தனது ஃப்ரீ டைம்ல் ஸ்கைடைவிங் போன்ற அட்வென்ச்சர் விளையாட்டுகளில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார்.
3/8
Photo Credit: filmibeat
Share
அஜித்தின் பொழுதுபோக்கு என்னவென்று அவரின் ரசிகர்கள் அனைவருக்கும் தெரிந்ததே. தனது ஃப்ரீ டைம்ல் குக்கிங், ரேஸிங், புத்தகம் வாசிப்பது போன்ற செயல்களில் ஆர்வம் காட்டி வருகிறார்.
4/8
Photo Credit: filmibeat
Share
தென்னிந்தியாவின் ஸ்டார் நடிகை தமன்னா, தற்போது ஹிந்தியில் என்ட்ரி கொடுத்து பிரபல நடிகையாக வலம் வருகிறார். ஷூட்டிங் இல்லாதபோது இவர், நண்பர்களுடன் நேரத்தை செலவிடுவது, விதவிதமான உணவுகளை சுவைப்பது, புத்தகம் வாசிப்பது என தனது ஃப்ரீ டைம்மை என்ஜாய் செய்து வருகிறார்.
5/8
Photo Credit: filmibeat
Share
எவர்க்ரீன் நடிகை த்ரிஷாவுக்கு பார்ட்டி செய்வது ரொம்ப பிடிக்குமாம். அதுமட்டுமில்லாமல் அட்வென்ச்சர் விளையாட்டுகள், நண்பர்களுடன் ஊர் சுற்றுவது என தனது ப்ரீ டைம்மை என்ஜாய் செய்து வருகிறார்.
6/8
Photo Credit: filmibeat
Share
சூப்பர் ஸ்டார் ரஜினிக்கு ஃப்ரீ டைம் கிடைப்பது மிகவும் அரிது என்றே சொல்லலாம். அப்படி ஃப்ரீ டைம் கிடைக்கும் போது நண்பர்களுடன் ஆன்மிக சுற்றுலா சென்று மனதை ரிலாக்ஸ் செய்துகொள்வாராம்.
7/8
Photo Credit: filmibeat
Share
படங்களை குறைத்துக்கொண்டு நடிகை நயன்தாரா, தனது ஃப்ரீ டைம்ல் கணவர் குழந்தைகளுடன் ஜாலியாக ட்ரிப் செல்வது என ஜாலியாக நேரத்தை செலவு செய்து வருகிறார்.
8/8
Photo Credit: filmibeat
Share
முன்பெல்லாம் சிம்புவுக்கு பார்ட்டி செய்வது ரொம்பபிடிக்கும் ஆனால் தற்போது ஃபிட்னஸ், வீடியோ கேம் விளையாடுவது, இசையமைப்பது என மனதை ரிலாக்ஸ் செய்யும் விஷயங்களை தனது ஃப்ரீ டைம்மில் செய்து வருகிறார்.


Click it and Unblock the Notifications