தமிழ் சினிமாவை கலக்கும் மலையாள நடிகர்கள்.. யாரெல்லாம் இருக்காங்க? என்னென்ன படம்?
மலையாள சினிமாவை கலக்கிய ஸ்டார் நடிகர்கள் சிலர் தமிழ் சினிமாவிலும் என்ட்ரி கொடுத்து தமிழ் ஆடியன்ஸை ஈர்த்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ் ஆடியன்ஸால் கொண்டாடப்படும் மலையாள நடிகர்கள் யார் யார்? அவர்கள் நடித்த படம் என்ன? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
மலையாள நடிகர் விது-வை பெரும்பாலானோருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மலையாள சினிமாவில் கலக்கும் விது, 'ஜிகர்தண்டா டபிள் எக்ஸ்' படத்தில் முக்கிய ரோலில் நடித்திருப்பார். அதனை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளிவந்த ரெட்ரோ படத்தில் வில்லன் ரோலில் நடித்து தமிழ் ஆடியன்ஸ் மனத்தில் இடம் பிடித்திருப்பார். தொடர்ந்து வெவ்வேறு தமிழ் படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
மலையாள சினிமாவின் தரமான நடிகர் செம்பன் வினோத். இவர், கோலி சோடா, கமலின் விக்ரம் ஆகிய படங்களில் முக்கிய ரோலில் நடித்திருப்பார். அதனை தொடர்ந்து சமீபத்தில் வெளிவந்த 'தலைவன் தலைவி' படத்திலும் முக்கிய ரோலில் நடித்து தமிழ் ஆடியன்ஸ் மனத்தில் இடம் பிடித்தார்.
மலையாள உலகில் முன்னணி நடிகராவும், இயக்குனராகவும் வலம் வருபவர் பசில் ஜோசப். இயக்குநராவும், நடிகராகவும் மலையாளத்தில் பல ஹிட் படங்கள் கொடுத்துள்ள இவருக்கு தமிழ் பட வாய்ப்பு தேடி வர தொடங்கியுள்ளது. அதன்படி சிவகார்த்திகேயனின் 'பராசக்தி' படத்தில் நடித்து வருகிறார். மேலும் இரண்டு, மூன்று படங்களில் கமிட்டாகியுள்ளாராம்.
மலையாளத்தில் வெளிவந்த பனி மற்றும் இரட்டை ஆகிய படத்தின் மூலம் தமிழ் ஆடியன்சைன் கவனம் ஈர்த்தவர் ஜோஜு ஜார்ஜ். இதனால் இவருக்கு கமலின் 'தக் லைஃப்' பட வாய்ப்பு தேடி வந்தது. தொடர்ந்து ஜகமே தந்திரசம், ரெட்ரோ ஆகிய படங்களில் நடித்துள்ளார். மேலும் வெவ்வேறு தமிழ் படங்களில் கமிட்டாகியுள்ளாராம்.
மலையாள சினிமாவின் ஸ்டார் நடிகர் சௌபின் சாகிர், மஞ்சுமல் பாய்ஸ் படத்தின் மூலம் தமிழ் ஆடியன்ஸான் கவனம் ஈர்த்தார். தமிழில் இவருக்கென கொஞ்சம் ரசிகர்கள் கூட்டம் இருந் நிலையில் ரஜினியின் கூலி படத்தில் முக்கிய ரோலில் நடிக வாய்ப்பு தேடி வந்தது. அதன்படி கூலி திரைப்படம் இவரை தமிழில் மிகவும் பிரபலமாகியது. தொடர்ந்து வெவ்வேறு படங்கள் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு கலக்கு கலக்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications