Home / Photos
தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட மலையாள நடிகைகளின் லிஸ்ட்.. யாரெல்லாம் பாத்தீங்களா?
By Chandru
மலையாள நடிகைகளுக்கு, மலையாள நடிகர்கள் சிலர் பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்து மலையாள திரையுலகில் பெரும் பூகம்பம் வெடித்துள்ளது. அதன்படி மலையாள நடிகர்கள் சிலரின் மேல் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ் ரசிகர்களை அதிகம் ஈர்த்த, தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்பட்ட தமிழ் நடிகைகள் யார் யார் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/6
Share
சிறந்த நடிகைக்கான தேசிய திரைப்பட விருதை வென்றவர் நடிகை நித்யா மேனன். தமிழ் ரசிகர்களின் கனவுக்கன்னியாக வலம் வரும் நித்யா, பெங்களூர் டேஸ், மெர்சல், திருச்சிற்றம்பலம், பிராணா உள்ளிட்ட படங்களில் நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.
2/6
Share
தமிழ் சினிமாவுக்கு நயன்தாரா எப்படியோ அதே போல் தான் மலையாள சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் நடிகை மஞ்சு வாரியார். அஜித்தின் துணிவு மற்றும் தனுஷின் அசுரன் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்பட்டார்.
3/6
Share
90ஸ் கிட்ஸின் ஃபேவரைட் நடிகையாக வலம் வந்தவர் நடிகை பாவனா. மலையாள நடிகையான இவர் தமிழ் சினிமாவில் உள்ள ஸ்டார் நடிகர்களுடன் ஜோடியாக நடித்துள்ளார். தமிழ் ரசிகர்களை ஈர்த்த பாவனா தென்னிந்தியாவின் ஸ்டார் நடிகையாக வலம் வருகிறார்.
4/6
Share
மலையாள சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை காவ்யா மாதவன். விக்ரமின் காசி, என் மன வானில், பிரசன்னாவின் சாது மிரண்டா உள்ளிட்ட படங்களில் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தார்.
5/6
Share
மலையாள நடிகையான மம்தா மோகன்தாஸ், சிவப்பதிகாரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகமானார். தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த மலையாள நடிகைகளில் இவரும் ஒருவர்.
6/6
Share
பெங்களூரு டேஸ் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு பரீட்சியமானவர் நடிகை பார்வதி திருவொத்து. சார்லி, உயிரே உள்ளிட்ட படங்களின் நடித்து தமிழ் ரசிகர்களின் மனதில் குடியேறினார்.


Click it and Unblock the Notifications