தவெக கட்சியில் உள்ள கோடீஸ்வர வேட்பாளர்கள்.. யாரெல்லாம்? சொத்து மதிப்பு என்ன? சுவாரசிய லிஸ்ட்!
2026 தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கான பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. வெவ்வேறு கட்சிகள் தீவிர பிரச்சாரத்தில் களமிறங்கி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுவருகின்றன. அதேபோல் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களின் சொத்து மதிப்பு விவரத்தை வேட்புமனு தாக்கலின் போது வெளியிட்டனர். அந்த வகையில் விஜய்யின் தவெக கட்சியில் உள்ள கோடீஸ்வர வேட்பாளர்கள் யார் யார்? அவர்களின் சொத்து மதிப்பு என்ன? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
தவெக கட்சியில் உள்ள கோடீஸ்வர வேட்பாளர்களின் பட்டியலில் 5ம் இடத்தில் நிர்மல்குமார் உள்ளார். மதுரை, திருப்பரங்குன்றம் தவெக வேட்பாளராக போட்டியிடும் நிர்மல்குமாரின் சொத்து மதிப்பு ரூ.1 கோடியே 6 லட்சம் என வேட்புமனுவில் தெரிவித்துள்ளார். 4 கார்கள், 1 இருசக்கர வாகனம் மற்றும் 46 கிராம் தங்கம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தவெக கட்சியில் உள்ள கோடீஸ்வர வேட்பாளர்களின் பட்டியலில் 4ம் இடத்தில் புஸ்ஸி ஆனந்த் உள்ளார். தவெக கட்சி பொதுச்செயலாளரும், டி நகர் தவெக கட்சி வேட்பாளருமான புஸ்ஸி ஆனந்தின் சொத்து மதிப்பு 2,04,91,418 ரூபாய் என வேட்புமனுவில் தெரிவித்துள்ளார். தன்னிடம் 88 கிராம் தங்கமும், மனைவியிடம் 1240 கிராம் தங்கம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
தவெக கட்சியில் உள்ள கோடீஸ்வர வேட்பாளர்களின் பட்டியலில் 3ம் இடத்தில் செங்கோட்டையன் உள்ளார். அதிமுகவில் இருந்து விஜய்யின் தவெக கட்சியில் இணைந்த செங்கோட்டையன், கோபிசெட்டிபாளையம் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிடுகிறார். இவரின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 11.50 கோடி ரூபாய் என வேட்புமனுவில் தெரிவித்துள்ளார்.
தவெக கட்சியில் உள்ள கோடீஸ்வர வேட்பாளர்களின் பட்டியலில் 2ம் இடத்தில் ஆதவ் அர்ஜுனா உள்ளார். தவெக தேர்தல் பிரச்சார மேலாண்மை பொதுச்செயலர் ஆதவ் அர்ஜுனா, வில்லிவாக்கம் தொகுதியில் போட்டியிடுகிறார். இவரின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 197 கோடி ரூபாய் என வேட்புமனுவில் தெரிவித்துள்ளார்.1691 கிராம் தங்கம் தன்னிடம் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த பட்டியலில் விஜய் முதல் இடத்தில் உள்ளார். தவெக கட்சி தலைவர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு இடங்களில் போட்டியிடுகிறார். விஜய்யின் அசையும் சொத்து மதிப்பு சுமார் 404.58 கோடி ரூபாயும், அசையா சொத்து மதிப்பு சுமார் 220.15 கோடி ரூபாய் எனக்கும் வேட்புமனுவில் தெரிவித்துள்ளார். மேலும் ரூ.1.20 கோடி மதிப்பிலான 883 கிராம் தங்கம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளர்.


Click it and Unblock the Notifications