மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு.. இதுவரை ராஜினாமா செய்த எம்எல்ஏ-கள்.. பட்டியல்!
தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏ-கள் சிலர் உட்க்கட்சி பூசலால் தங்களின் எம்எல்ஏ பதிவியை ராஜினாமா செய்துள்ளார். யாரெல்லாம்? வாங்க பார்ப்போம்.
எதிர்பார்க்காததை எதிர்பாருங்கள் என்று சொல்வது போல் தமிழ்நாடு அரசியல் களத்தில் பல ட்விஸ்ட் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. 2026 சட்டமன்ற தேர்தலில் விஜய்யின் தவெக மாபெரும் வெற்றிபெற்று விஜய் முதலமைச்சர் ஆகியுள்ளார். இது யாரும் எதிர்பார்த்திடாத ட்விஸ்ட் வெற்றி என்றே சொல்லலாம். ஆளும் திமுக மீண்டும் ஆட்சி அமைக்கும் என்பதே பெரும்பாலான கருத்துக்கணிப்பாக இருந்தது. அதனை பொய்யாக்கி தவெக ஆட்சியமைத்தது தமிழ்நாடு அரசியல் வரலாற்றிலேயே மிக பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இரு பெரும் திராவிட கட்சிகளை மக்கள் இனி புறம்தள்ளுவர், இனி எதிர்காலமே தவெக தான் என அரசியல் விமர்சகர்கள் பலரும் கூறுகின்றனர். மற்றொரு பக்கம் அதிமுக கட்சிக்குள் பல முரண்கள் ஏற்படவே விஜய்யின் தவெக கட்சியில் இணைய பலரும் விருப்பம் காட்டி வருவதாக கூறப்படுகிறது. அதன் எதிரொலியாக தேர்தலில் வெற்றிபெற்ற அதிமுக எம்எல்ஏ-கள் சிலர் தங்களின் பதவியை ராஜினாமா செய்துள்ளனர். அவர்கள் யார்? யார்? எந்தெந்த தொகுதி காலியாகவுள்ளது? வாங்க பார்ப்போம்.
2026 சட்டமன்ற தேர்தலில் பெருந்துறை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அதிமுகவை சேர்ந்த எஸ்.ஜெயக்குமார் கடந்த மே 25ம் தேதி பதவியை ராஜினாமா செய்தார். தற்போது பெருந்துறை தொகுதி காலியாகவுள்ளது. இடைத்தேர்தலுக்காக வெயிட்டிங்.
2026 சட்டமன்ற தேர்தலில் மதுராந்தகம் (தனி) தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அதிமுகவை சேர்ந்த மரகதம் குமரவேல், கடந்த மே 25ம் தேதி பதவியை ராஜினாமா செய்தார். அதன்பின்னர் விஜய்யின் தவெக கட்சியில் இணைந்தார்.
2026 சட்டமன்ற தேர்தலில் தாராபுரம் (தனி) தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அதிமுகவை சேர்ந்த சத்யபாமா, கடந்த மே 25ம் தேதி பதவியை ராஜினாமா செய்தார். இவரும் விஜய்யின் தவெக கட்சியில் இணைந்தார்.
2026 சட்டமன்ற தேர்தலில் அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிட்டு 65,589 வாக்குகளுடன் அதிமுகவை சேர்ந்த இசக்கி சுப்பையா, வெற்றி பெற்றார். இவர் கடந்த மே 27ம் தேதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.
2026 சட்டமன்ற தேர்தலில் விராலிமலை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் அதிமுகவை சேர்ந்த சி.விஜயபாஸ்கர். இவர், கடந்த ஜூன் 16ம் தேதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார்.
2026 சட்டமன்ற தேர்தலில் கரூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் அதிமுகவை சேர்ந்த எம்.ஆர்.விஜயபாஸ்கர். இவர், நேற்று ஜூன் 29ம் தேதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். விஜய்யின் தவெக கட்சியில் இணைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
தவெக கட்சி தலைவர் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதில், திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்த நிலையில் அத்தொகுதி காலியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தொகுதி பெரும் எதிர்பார்ப்புடன் இடைத்தேர்தலுக்காக வெயிட்டிங்.


Click it and Unblock the Notifications