Home / Photos
PHOTOS: 2023: "அச்சச்சோ இவரா பயங்கரமான ஆளாச்சே!" ரசிகர்களால் கொண்டாடப்பட்ட வில்லன் கதாபாத்திரங்களின் லிஸ்ட்!
By Chandru
தமிழ் சினிமாவில் சமீப காலமாக முன்னணி நடிகர்களே வில்லன் கதாபாத்திரத்தை பிரியமுடன் ஏற்று நடித்து வருகின்றனர். இதற்கு பிள்ளயார் சுழி போட்டது யார் என்று கேட்டல் வேற யாரு நம்ம அஜித் தான். மங்காத்தா படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையே மெர்சல் செய்திருப்பார். அவரை தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் அசத்தி வருகிறார். அதேபோல் பல முன்னணி நடிகர்களும் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க விருப்பப்படுகின்றனர் போல் தெரிகிறது. அந்தவகையில் இந்த ஆண்டு ரசிகர்களின்
1/7
Share
தமிழ் சினிமாவில் சமீப காலமாக முன்னணி நடிகர்களே வில்லன் கதாபாத்திரத்தை பிரியமுடன் ஏற்று நடித்து வருகின்றனர். இதற்கு பிள்ளயார் சுழி போட்டது யார் என்று கேட்டல் வேற யாரு நம்ம அஜித் தான். மங்காத்தா படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த தமிழ் சினிமாவையே மெர்சல் செய்திருப்பார். அவரை தொடர்ந்து நடிகர் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் அசத்தி வருகிறார். அதேபோல் பல முன்னணி நடிகர்களும் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க விருப்பப்படுகின்றனர் போல் தெரிகிறது. அந்தவகையில் இந்த ஆண்டு ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்து வில்லன் கதாபாத்திரங்கள் எவை எவை என்று பார்ப்போம்..
2/7
Share
ரத்னவேல்: வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ் ஆகியோர் நடிப்பில் வெளியான படம் மாமன்னன். இப்படத்தில் தமிழ், மலையாள நடிகர் ஃபகத் ஃபாசில் ரத்னவேல் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். ஃபகத் ஃபாசிலின் ரத்னவேல் கதாபாத்திரம் ரசிகர்களை மிகவும் கொண்டாடப்பட்டது, சோசியல் மீடியாக்களில் மீம்ஸ் ஆகவும் அதிகளவில் பகிரப்பட்டது.
3/7
Share
கென்னடி செபாஸ்டின்: நடிகர் சரத்குமார், அசோக் செல்வன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான சைக்கோ திரில்லர் திரைப்படம் போர்த்தொழில். இப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் மறைந்த நடிகர் சரத்பாபு நடித்திருப்பார். சரத்பாபுவின் கென்னடி கதாபாத்திரம் ரசிகர்களை பெரிதும் ஈர்த்தது.
4/7
Share
ஜெயக்கொடி: நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் யோகி பாபு, ஆதிதி ஷங்கர் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் மாவீரன். தொடர்ந்து இரண்டு மூன்று ஃபிளாப் படங்களை கொடுத்து வந்த சிவகார்த்திகேயனுக்கு இப்படம் அதிரடி கம்பேக் படமாக அமைந்தது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக இயக்குநர் மிஷ்கின் ஜெயக்கொடி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். மிஷ்கினின் வில்லன் நடிப்பு ரசிகர்களை மிகவும் ஆச்சரியப்படுத்தியது.
5/7
Share
காளி: பாலிவுட் கிங் ஷாருக்கான் நடிப்பில் வெளியான ஜவான் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டானது. விமர்சனம் ரீதியாக ரசிகர்களை ஈர்த்த இப்படம் வசூலில் 1000 கோடி ரூபாயை தாண்டியது. இப்படத்தில் ஷாருக்கானுக்கு வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி காளி என்ற கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டல் செய்திருப்பார்.
6/7
Share
வர்மன்: சூப்பர் ஸ்டார் ரஜினி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியான படம் ஜெயிலர். ரஜினிக்கு கம்பேக் கொடுத்த படம் என்றே சொல்லலாம். இப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக மலையாள நடிகர் விநாயகன் வர்மன் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். வர்மன் கதாபாத்திரம் ரசிகர்கள் மிகவும் ரசிக்கப்பட்டது.
7/7
Share
ஜாக்கி பாண்டியன்: விஷால், எஸ்.ஜே. சூர்யா நடிப்பில் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட்டான படம் மார்க் ஆன்டனி. இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யாவின் ஜாக்கி பாண்டியன் கதாபாத்திரம் ரசிகர்களை ஈர்த்து. தொடர்ந்து வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வரும் எஸ்.ஜே. சூர்யா இப்படத்தில் இரு வேடங்களில் நடித்து அசத்தியிருப்பார்.


Click it and Unblock the Notifications