ஆசியா முதல் அமெரிக்கா வரை.. ஒவ்வொரு கண்டத்திலும் உள்ள நம்பர் ஒன் பணக்காரர்கள்.. சொத்து மதிப்பு என்ன? சுவாரசிய லிஸ்ட்!
ஒவ்வொரு நாட்டின் நம்பர் ஒன் பணக்காரர்கள் யார்? அவர்களின் சொத்து மதிப்பு என்ன? என்பதை நாம் பார்த்திருப்போம். ஆனால் ஒவ்வொரு கண்டத்தில் உள்ள நம்பர் ஒன் கோடீஸ்வரர் யார் என்பதை நாம் பார்த்திருக்கமாட்டோம். அந்த வகையில் ஒவ்வொரு கண்டத்திலும் உள்ள நம்பர் ஒன் பணக்காரர்கள் யார்? அவர்களின் மொத்த சொத்து மதிப்பு என்ன? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
ஆஸ்திரேலியா கண்டத்தின் நம்பர் ஒன் கோடீஸ்வரர் ஜினா ரைன்ஹார்ட். இரும்புத்தாது சுரங்கம் மூலம் கோடிகளில் வருமானம் ஈட்டி வரும் இவரின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 38.1 பில்லியன் டாலராகும்.
தென் அமெரிக்கா கண்டத்தின் நம்பர் ஒன் பணக்காரர் கார்லோஸ் ஸ்லிம் ஹெலு. மிக பெரிய தொழிலதிபரான இவரின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 99.1 பில்லியன் டாலராகும்.
ஆசிய கண்டத்தின் நம்பர் ஒன் கோடீஸ்வரர் முகேஷ் அம்பானி. ரிலையன்ஸ் உட்பட பல துறைகளில் முதலீடு செய்து நிமிடத்திற்கு கோடிகளில் வருமானம் ஈட்டி வரும் அம்பானியின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 106.7 பில்லியன் டாலராகும்.
ஐரோப்பிய கண்டத்தின் நம்பர் ஒன் கோடீஸ்வரர் பெர்னார்ட் அர்னால்ட். உலக பிரபலமான Louis Vuitton நிறுவனத்தின் நிறுவனர் ஆவார். இவரின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 192 பில்லியன் டாலராகும்.
ஆப்ரிக்க கண்டத்தின் நம்பர் ஒன் கோடீஸ்வரர் அலிகோ டாங்கோட். எண்ணெய் சுத்திகரிப்பு நிறுவனம் உட்பட பல நிறுவனங்களில் முதலீடு செய்து கோடிகளில் வருமானம் ஈட்டி வருகிறார். 100 உலக பணக்காரர்கள் பட்டியலில் இவரும் ஒருவர். இவரின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 23.9 பில்லியன் டாலராகும்.
வட அமெரிக்கா கண்டத்தின் நம்பர் ஒன் கோடீஸ்வரர் எலான் மஸ்க். உலகின் நம்பர் ஒன் கோடீஸ்வரராகவும் இருந்து வருகிறார். இவரின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 726 பில்லியன் டாலராகும்.


Click it and Unblock the Notifications