Home / Photos
வெள்ளித்திரை நடிகர்களை போல.. பிசினஸில் கொடிகட்டி பறக்கும் சின்னத்திரை நடிகர்களின் லிஸ்ட்.. யாரெல்லாம் பாருங்க!
By Chandru
சொந்தமாக பிசினஸ் நடத்தி வரும் சின்னத்திரை பிரபலங்கள் யார் யார் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/8
Share
பிக் பாஸ் விஜே மகேஸ்வரி, சொந்தமாக உணவகம் ஒன்றை நடத்தி வருகிறார். சினிமாவில் பிஸியாக இருக்கும் மகேஸ்வரி, பிசினஸில் நல்ல வருமானத்தை ஈட்டி வருகிறாராம்.
2/8
Share
சீரியல் நடிகரும், பிக் பாஸ் போட்டியாளருமான சஞ்சீவ், சென்னையில் பல இடங்களில் சொந்தமாக காபி ஷாப் நடத்தி வருகிறார். இவர் ஷூட்டிங் சென்றுவிட்டாள் இவரின் மனைவி காபி ஷாப்பை கவனித்து வருவாராம்.
3/8
Share
சீரியல் நடிகை மகாலட்சுமி, திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்திர சந்திரசேகரை காதல் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின் கணவனின் திரைப்பட தயாரிப்பு நிறுவனத்தை கவனித்து வருகிறார்.
4/8
Share
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை ஸ்ருத்திகா. சொந்தமாக அழகு சாதன பொருட்கள் தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
5/8
Share
நடிகை வனிதா விஜய்குமார், சொந்தமாக ஃபேஷன் பொட்டிக் கடை ஒன்றை நடத்தி வருகிறார். இதில் ஃபேஷன் சேலைகள், மாடர்ன் உடைகள், பிளவுஸ்கள் என பெண்களுக்கு தேவையான ஆடைகளை தயாரித்து வருகிறார்.
6/8
Share
வெள்ளைத்திரை மற்றும் சின்னத்திரை நடிகர் பப்லூ, சென்னையில் பல இடங்களில் சொந்தமாக ஹோட்டல்களை நடத்தி வருகிறார். இதன் மூலம் நல்ல வருமானத்தை ஈட்டி வருகிறார்.
7/8
Share
முன்னணி சீரியல் நடிகரான ஸ்ரீகுமார் கணேஷ், சொந்தமாக தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
8/8
Share
சீரியல் நடிகை சந்தோஷி, மேக்கப் ஆர்டிஸ்டாக கலக்கி வருகிறார். இவர், சொந்தமாக மேக்கப் ஸ்டுடியோ ஒன்றை நடத்தி வருகிறார்.


Click it and Unblock the Notifications