Home / Photos
ஹாலிவுட் சினிமாவுக்கே டஃப் கொடுக்கும்.. இந்தியாவின் சூப்பர் ஹீரோ திரைப்படங்கள்.. எந்தெந்த படம் பாத்தீங்களா?
By Chandru
ஹாலிவுட் படங்கள் என்றாலே முதலில் நியாபகம் வருவது சூப்பர்மேன், பேட்மேன், மார்வெல்ஸ் உள்ளிட்ட சூப்பர் ஹீரோக்களின் படங்கள் தான். சூப்பர் ஹீரோக்களின் கதாபாத்திரத்தை சூப்பராக வடிவமைத்து சினிமா ரசிகர்களை ஈர்த்து வருகின்றனர். அந்தவகையில் இந்தியாவில் சூப்பர் ஹீரோக்களே இல்லையா என்ற கேள்விக்கு பதில் கிடைத்துள்ளது. அதாவது ஹாலிவுட் சினிமாவை போல் சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தை வைத்து எடுக்கப்பட்ட இந்திய படங்கள் எது எது என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/8
Share
90ஸ் கீட்ஸின் ஃபேவரைட் திரைப்படம் க்ரிஷ். நடிகர் ஹ்ரித்திக் ரோஷன் நடிப்பில் வெளியான இப்படம் 3 பாகங்களாக வெளியாகி பான் இந்தியா படமாக சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இப்படத்தில் ஹ்ரித்திக் ரோஷன் தனித்துவமான சக்திகளை கொண்டிருப்பார்.
2/8
Share
நடிகர் சூர்யா நடிப்பில் கடந்த 2011ம் ஆண்டு வெளியான படம் 7ம் அறிவு. மற்றவரை கட்டுப்படுத்தும் சக்தியை கொண்டிருப்பார் சூர்யா, அதேபோல் ஐம்புலன்களை கட்டுப்படுத்தும் சக்தியையும் கொண்டிருப்பார்.
3/8
Share
கடந்த 2021ம் ஆண்டு வெளியான படம் மின்னல் முரளி. டோவினோ தாமசு, குறு நடிப்பில் வெளியான இப்படத்தில் ஹீரோ மற்றும் வில்லன் இருவருமே அசாத்திய சக்திகள் கொண்டிருப்பார்கள்.
4/8
Share
2022ம் ஆண்டு ரன்பீர் கபூர் நடிப்பில் மிக பெரிய பொருட்செலவில் வெளியான படம் பிரம்மாஸ்திரா. இப்படத்தில் ரன்பீர் கபூருக்கு சூப்பர் ஹீரோ பவர் இருக்கும். இந்திய புராணங்களை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட படமாகவும்.
5/8
Share
2023ம் ஆண்டு நடிகர் ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் வெளியான படம் வீரன். இப்படத்தில் ஆதி, மின்னலின் சக்தி கொண்டு சூப்பர் ஹீரோவாக மக்களை காப்பாற்றுவார்.
6/8
Share
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான படம் அயலான். ஏலியன் படமாக மக்களை ஈர்த்த இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஏலியனின் சக்தி கொண்டிருப்பார்.
7/8
Share
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான சூப்பர் டூப்பர் ஹிட் படம் மாவீரன். ஹீரோவின் கண்ணுக்கே தெரியாமல் ஒரு சக்தி சிவகாத்திகேயனை வீரனாக வழிநடத்தும்.
8/8
Share
தெலுங்கு மொழியில் வெளியான படம் ஹனுமான். இப்படத்தில் ஹீரோ ஹனுமான் சக்தி கொண்டிருப்பார்.


Click it and Unblock the Notifications