ஒரே ஒரு படம் ஹிட் கொடுத்து காணாமல் போன தமிழ் நடிகைகள்.. அடடே இத்தனை பேரா? சுவாரசிய லிஸ்ட்!
கோலிவுட் சினிமாவில் ஒரே ஒரு படம் ஹிட் கொடுத்துவிட்டு பின்னர் காணாமல் போன தமிழ் நடிகைகள் யார் யார் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
அஜித் நடிப்பில் வெளிவந்த சூப்பர் டூப்பர் ஹிட் திரைப்படம் 'காதல் மன்னன்'. அப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக மானு என்பவர் நடித்திருந்தார். அது தான் அவரின் முதல் படமாகும். திலோத்தமா என்ற ரோல் மானுவை மிகவும் பிரபலமாகியது. அதன்பின்னர் வெவ்வேறு படங்களில் நாயகியாக வலம் வருவார் என்ற எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தமிழ் இருந்து டோட்டலாக் வெளியேறினார்.
கமல் நடிப்பில் வெளிவந்த ஹிட் திரைப்படம் 'குணா'. அப்படத்தில் அபிராமி என்ற ரோலில் நடிகை ரோஷினி நடித்திருந்தார். அப்படம் செம ஹிட்டானது, ரோஷினியும் பெருமளவில் பேசப்பட்டார். இருப்பினும் அவர், தமிழ் படங்களில் நடிப்பதை நிறுத்திக்கொண்டார்.
விஜய்யின் 'யூத்' படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை ஷாஹீன் கான் நடித்திருந்தார். ஒரே ஒரு ஹிட் படம் கொடுத்து இளைஞர்களின் மனதில் இடம் பிடித்துவிட்டு காணாமல் போனார்.
மாதவன் நடிப்பில் வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படம் 'ஜே ஜே'. இந்த ரொமான்டிக் காமெடி படத்தில் மாதவனுக்கு ஜோடியாக பிரியங்கா கோத்தாரி நடித்திருந்தார். சினிமா ரசிகர்களின் மனம் கவர்ந்த இவர், ஒரே ஒரு ஹிட் படத்தோடு தமிழ் சினிமாவில் இருந்து காணாமல் போனார்.
மாதவன் நடிப்பில் வெளிவந்த 'நள தமயந்தி' படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை கீது மோகன்தாஸ் நடித்திருந்தார். அப்படத்திற்கு பின் தமிழ் சினிமாவுக்கு நோ சொல்லிவிட்டு பிற மொழி படங்களில் நடித்து வந்தார்.
அஜித்தின் 'ரெட்' படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை பிரியா கில் நடித்திருந்தார். அப்படம் ஹிட்டானதை தொடர்ந்து தமிழில் இருந்த விலகி பிற மொழிகளில் நடித்து வந்தார்.
விஜய்யின் 'மின்சாரா கண்ணா' படத்தில் அவருக்கு ஜோடியாக மோனிகா காஸ்டெலினோ நடித்து இளைஞர்கள் கூட்டத்தை ஈர்த்தார். முதல் படத்திலேயே கிளாமர் காட்டி இளசுகளை ஏங்கவைத்த இவர், அதன்பின்னர் தமிழ் சினிமாவில் ஆளையே காணோம்.



Click it and Unblock the Notifications