ஐ-போனில் படமாக்கப்பட்ட 'விடுதலை'?.. வேற என்னென்ன படங்கள் எடுக்கப்பட்டது.. சுவாரசிய லிஸ்ட் இதோ!
நாளுக்கு நாள் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி பலமடங்கு பெருகிக்கொண்டே வருகிறது. மனிதர்களுக்கும் தொழில்நுட்பத்திற்கு ஏற்றவரு தங்களை அப்டேட் செய்துகொண்டே வருகின்றனர். தொழில்நுட்பத்தின் உதவியோடு தான் பல துறைகள் தடையில்லாமல் இயங்கி வருகிறது. குறிப்பாக சினிமா துறையில் தொழில்நுட்பம் மிக முக்கிய பங்காற்றி வருகிறது. அதிலும் காட்சிகளை படமாகும் கேமராவின் பங்கு மிக அதிகம். 80களில் பிலிம் ரோல் கேமரா பயன்படுத்தப்பட்டு திரைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. தொழில்நுட்பம் வளர வளர கேமராவின் வடிவமைப்பு மாறத் தொடங்கியது. எல்லாம் டிஜிட்டல் மயமாக மாறிவிட்டது. பெரிய பெரிய கேமராக்களில் எடுக்கப்பட்டு வந்த திரைப்படங்கள் தற்போது செல்போன்களில் படமாக்கப்பட்டு வருகிறது. ஒரு பெரிய கேமராவில் கிடைக்கும் அதே அனுபவம் ஒரு செல்போனில் கிடைக்கும் என்றால் அது தொழில்நுட்பத்தின் அசாத்திய வளர்ச்சி என்றே கூறலாம். டெக் உலகை ஆட்டிப்படைக்கும் ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-போன் கேமரா குவாலிட்டிக்கு உலகம் முழுவதும் மிக பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளனர். அந்த வகையில் பெரிய கேமராவுக்கு பாய் பாய் சொல்லிவிட்டு கைக்குள் அடங்கும் ஐ-போன் மூலம் படமாக்கப்பட்ட திரைப்படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
Uneasy Lies the Mind: 2014ல் வெளியான திரைப்படம் Uneasy Lies the Mind. திரில்லர் கதைக்களத்தில் வெளியான இப்படம் முழுக்க முழுக்க ஐ-போன் மூலம் படமாக்கப்பட்டது. இப்படத்தின் காட்சியமைப்பு பார்க்க ஆசைப்பட்டால் அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் மிஸ் பண்ணிடாதீங்க.
Fursat: கடந்தாண்டு வெளியான ரொமான்டிக் மியூசிக்கல் திரைப்படம் Fursat. இப்படம் ஐ-போன் 14 Pro மூலம் படமாக்கப்பட்டுள்ளது.
ஆண்ட்ரியா நடிப்பில் கடந்த 2019ம் ஆண்டு வெளியான குறும்படம் Lockdown. இப்படம் கொரோனா நோய் தொற்று ஊரடங்கின் போது ஐ-போனில் எடுக்கப்பட்டு வெளியானது.
சந்தோஷ் நம்பிராஜன் இயக்கி, நடித்திருக்கும் திரைப்படம் அகண்டன். இப்படம் முழுக்க முழுக்க ஐ-போன் 11 மூலம் படமாக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications