Home / Photos
PHOTOS: நண்பர்கள் தினம் இன்று! நட்பை கொண்டாடும் தமிழ் படங்கள்.. உங்க நட்பு எந்த திரைப்படத்தை போன்றது?
By Chandru
உலகம் முழுவதும் நண்பர்கள் தினம் ஆகஸ்ட் 6ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் இன்று உலக நண்பர்கள் தினத்தை உலகளவில் பலதரப்பட்ட மக்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். தாய், தந்தையருக்கு பிறகு அதிகம் மதிக்கப்படும் உறவாக நட்பு உள்ளது. எழுந்து நடக்க கற்றுக்கொண்டு அம்மா, அப்பா பெயர் சொல்லி பின்னர் 5 வயதில் பள்ளிக்கு சேரும் பொது அறிமுகமில்லாமல் கிடைக்கும் உறவு தான் நட்பு. காலங்கள் கடந்தாலும், வெற்றி தோல்விகள் வந்து சென்றாலும் என்றும் "நான் இருக்கேன்டா மச்சான்" என்று உறுதுணையாக இருப்பவர்கள் தான்
1/6
Share
உலகம் முழுவதும் நண்பர்கள் தினம் ஆகஸ்ட் 6ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில் இன்று உலக நண்பர்கள் தினத்தை உலகளவில் பலதரப்பட்ட மக்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். தாய், தந்தையருக்கு பிறகு அதிகம் மதிக்கப்படும் உறவாக நட்பு உள்ளது. எழுந்து நடக்க கற்றுக்கொண்டு அம்மா, அப்பா பெயர் சொல்லி பின்னர் 5 வயதில் பள்ளிக்கு சேரும் பொது அறிமுகமில்லாமல் கிடைக்கும் உறவு தான் நட்பு. காலங்கள் கடந்தாலும், வெற்றி தோல்விகள் வந்து சென்றாலும் என்றும் "நான் இருக்கேன்டா மச்சான்" என்று உறுதுணையாக இருப்பவர்கள் தான் நண்பர்கள். கடவுளை காட்டிலும் மிகவும் புனிதமாக மதிக்கப்படும் நட்பை கொண்டாடும் வகையில் தமிழில் ஏகப்பட்ட நண்பர்கள் திரைப்படங்கள் எடுக்கப்பட்டு வெற்றி கண்டுள்ளது. அந்தவகையில் இளைஞர்களின் மனம் கவர்ந்த சிறந்த நண்பர்கள் திரைப்படங்களை பற்றி பார்ப்போம்..
2/6
Share
தளபதி: இன்றளவும் தமிழ் ரசிகர்களால் கொண்டாடப்படும் திரைப்படங்களில் 'தளபதி' படமும் ஒன்று. நட்பை மையமாக கொண்டு உருவாக்கப்பட்ட இப்படம் இன்றளவும் நட்பின் இலக்கணமாக கருதப்படுகிறது. குறிப்பாக இப்படத்தில் நட்புன்னா என்னானு தெரியுமா? என்ற டியலாக் மிகவும் பிரபலம். சூப்பர் ஸ்டார் ரஜினி மற்றும் மம்முட்டி இவர்களின் இடையே ஏற்படும் நட்பு காலங்கள் கடந்தும் அழிக்கமுடியாத நினைவாகவே இருந்து வருகிறது.
3/6
Share
நட்புக்காக: இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில் நடிகர் சரத்குமார், விஜயகுமார் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான படம் நட்புக்காக. இப்படத்தில் சரத்குமார் மற்றும் விஜயகுமாரின் நட்பு மிக அழகாக காட்டப்பட்டிருக்கும். நண்பனின் மகளை காப்பாற்றுவதற்காக சிறை செல்லும் சரத்குமாரின் நட்பு பார்ப்போரை கண்களாக வைத்துவிடும், அதேபோல் நண்பன் (சரத்குமார் ) இறந்ததும் அந்த அதிர்ச்சியில் விஜயகுமாரின் உயிரை விடும் காட்சி கல் நெஞ்சம் கொண்டவர்களையும் கறையவைத்துவிடும்.
4/6
Share
ப்ரிண்ட்ஸ்: இயக்குநர் சித்திக் இயக்கத்தில் நடிகர் விஜய், சூர்யா நடிப்பில் வெளியான படம் ப்ரிண்ட்ஸ். விஜய் மற்றும் சூர்யா இவர்களுக்கிடையே ஏற்பட்டுள்ள அசைக்கமுடியாத நட்புதான் இப்படம் மூலகதையாகும். சில சதிகளாலும், சூழ்ச்சிகளாலும் இவர்களிடையே ஏற்படும் மனக்கசப்பு காரணமாக இருக்கும் பிரிந்து போய் பின்னர் மீண்டும் இருவரும் நண்பர்களாக இணைவது பார்ப்போரை கண்கலங்க வைத்துவிடும்.
5/6
Share
பிரியமான தோழி:இயக்குநர் விக்ரமனின் இயக்கத்தில் மாதவன், ஜோதிகா, ஸ்ரீதேவி நடிப்பில் வெளியான படம் பிரியமான தோழி. மாதவன் மற்றும் ஸ்ரீதேவி இடையே ஏற்படும் நட்பை மிக அழகாக இயக்குநர் விக்ரமன் எடுத்துக்காட்டியுள்ளார். தோழியின் வாழ்க்கைக்காக தனது லட்சியத்தையே உதறித்தள்ளும் நண்பனாக மாதவனின் நட்பு மிகவும் பாராட்டப்பட்டது.
6/6
Share
நண்பன்: இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் நண்பன். இப்படத்தில் மூன்று பெரும் கல்லூரி நண்பர்களாக, கல்லூரியில் செய்யும் சேட்டைகள் அனைத்தையும் இயக்குநர் ஷங்கர் அழகாக காட்டியுள்ளார். தனது நண்பர்களின் லட்சியத்துக்காக போராடும் விஜயின் கதாபாத்திரம் இளைஞர்களால் மிகவும் ரசிக்கப்பட்டது.


Click it and Unblock the Notifications