Home / Photos
தேர்தலுக்கு பின் தியேட்டர் ரிலீஸுக்கு தயாராகவுள்ள ஸ்டார் நடிகர்களின் படங்கள்.. என்னென்ன? ஜனநாயகன் ரிலீஸாகுமா?
By Chandru
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு வரும் மார்ச் 23ம் தேதி நடைபெறவுள்ளது. பரபரப்பான அரசியல் சூழல் நிலவி வருவதால் மக்கள் தேர்தல் மீது கவனம் செலுத்தி வருகின்றனர், இதனால் தியேட்டரில் ரிலீசாகும் படம் போதிய வசூல் பெறுவதில் சிரமம் ஏற்படும். இதனால் ஸ்டார் நடிகர்களின் படங்கள் தேர்தலுக்கு பின் தியேட்டரில் ரிலீசாகவுள்ளது. அந்த வகையில் தேர்தலுக்கு பின் ரிலீசாகவுள்ள தமிழ் படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/4
Photo Credit: filmibeat
Share
எச். வினோத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிரமாண்ட திரைப்படம் 'ஜனநாயகன்'. கடந்த ஜனவரி மாதம் இறைக்கு வரவிருந்த நிலையில் சென்சார் பிரச்சனையில் ரிலீஸாகாமல் கிடப்பில் உள்ளது. இப்படமும் வரும் மே மாதம் திரைக்கு வாரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2/4
Photo Credit: filmibeat
Share
பிரதீப் ரங்கநாதன், கீர்த்தி ஷெட்டி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ' லவ் இன்சூரன்ஸ் கம்பெனி LIK'. விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம், தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு பின் மே மாதம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
3/4
Photo Credit: filmibeat
Share
ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'கருப்பு'. கடந்த வருடம் சூர்யாவின் ரெட்ரோ திரைப்படம் ரிலீஸான நிலையில் அதன்பின்னர் எந்த ஒரு படமும் ரிலீஸாகாமல் கிடப்பில் உள்ளது. அந்த வகையில் கருப்பு திரைப்படம் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலுக்கு பின் மே மாதம் 15ம் தேதி திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
4/4
Photo Credit: filmibeat
Share
விக்னேஷ் ராஜா இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள ஆக்ஷன், க்ரைம், திரில்லர் திரைப்படம் 'கர'. மமிதா பைஜூ ஜோடியாக நடித்துள்ளார். தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த பின் ஏப்ரல் 28ம் தேதி தியேட்டரில் ரிலீசாகவுள்ளது.


Click it and Unblock the Notifications