Home / Photos
ஓடிடி-யில் வெளியான புது படங்கள் என்னென்ன? எதில் பார்க்கலாம்.. லிஸ்ட் இதோ!
By Chandru
இந்த வார ஓடிடி-யில் தமிழ் திரைப்படங்கள் எவை எவை, எந்த ஓடிடி தளத்தில் பார்க்கலாம் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/6
Share
நடிகை ஷில்பா மஞ்சுநாத், மாதவி லதா, சமுத்திரக்கனி உள்ளிட்டோர் நடிப்பில் உருவான படம் சிங்கப்பெண்ணே. விளையாட்டை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.
2/6
Share
நடிகர் ஹிப் ஹாப் ஆதி, பிரபு, பாக்கியராஜ், பாண்டியராஜ், காஷ்மிரா பர்தேசி உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் பிடி சார். இப்படமும் விளையாட்டை மையமாகக்கொண்டு கொடுக்கப்பட்டது. இப்படத்தை அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.
3/6
Share
காமெடி ட்ராமா படமாக மலையாளத்தில் வெளியான சூப்பர் படம் நடிகர். டோவினோ தாமஸ், ஷோபின் ஷாஹிர், பாவனா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இப்படத்தை நெட்ப்ளிக்ஸ் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.
4/6
Share
திண்டுக்கல் லியோனியின் மகன் லியோ சிவகுமார் ஹீரோவாக அறிமுகமான படம் அழகிய கண்ணே. சஞ்சிதா ஷெட்டி, பிரபு சாலமன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான இப்படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.
5/6
Share
நடிகர் அர்ஜுன் தாஸ் நடிப்பில் வெளியான படம் ரசவாதி. இவருக்கு ஜோடியாக நடிகை தான்யா ரவிச்சந்திரன் நடித்துள்ளார். இப்படத்தை ஆஹா ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.
6/6
Share
இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில் தமன்னா, ராஷிக் கண்ணா, யோகி பாபு, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் அரண்மனை 4. இப்படத்தை டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications