மாதம்பட்டி ரங்கராஜின் இரண்டாவது மனைவி ஜாய் கிரிஸில்டா.. ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றிய ஹிட் படங்கள்! என்னென்ன?
மாதம்பட்டி ரங்கராஜின் இரண்டாவது மனைவி ஜாய் கிரிஸில்டா பற்றிய பேச்சுக்கள் தான் சோசியல் மீடியாக்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறி அடுக்கடுக்கான புகைப்படங்கள் மற்றும் வீடியோ ஆதாரங்கள் மூலம் காவல் துறையில் புகார் தெரிவித்தார். அதன்படி காவல்துறையும் ரங்கராஜிடம் 4மணி நேரம் தீவிர விசாரணை நடத்தியது. விசாரணையை தொடர்ந்து ரங்கராஜ் சிக்கலில் இருப்பதாக கூறப்படுகிறது. திரையுலகில் பிரபல ஆடை வடிவமைப்பாளராக இருந்து வரும் ஜாய் கிரிஸில்டா, எந்தெந்த படங்களில் பணியாற்றியுள்ளார்? எந்தெந்த ஸ்டார் நடிகர்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக இருந்துள்ளார்? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
ஜிவி பிரகாஷ் ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகமான 'டார்லிங்' என்ற ஹாரர், காமெடி படத்தில் ஆடை வடிவமைப்பாளராக ஜாய் கிரிஸில்டா பணியாற்றினார்.
ஜிவி பிரகாஷ், ஆனந்தி நடிப்பில் 2016ல் வெளிவந்த திரைப்படம் 'எனக்கு இன்னொரு பேர் இருக்கு'. டார்லிங் படத்தை தொடர்ந்து இரண்டாவது முறையாக ஜிவி பிரகாஷுக்கு ஆடை வடிவமைப்பாளராக ஜாய் கிரிஸில்டா பணியாற்றினார்.
சிவகார்த்திகேயன், பகத் பாசில், நயன்தாரா நடிப்பில் வெளிவந்த 'வேலைக்காரன்' படத்தில் ஆடை வடிவமைப்பாளராக ஜாய் கிரிஸில்டா பணியாற்றினார். இப்படம் வசூலிலும், விமர்சனத்திலும் செம ஹிட்டானது.
விஜய், மோகன்லால் நடிப்பில் வெளிவந்த சூப்பர் ஹிட் திரைப்படம் 'ஜில்லா'. இப்படத்தில் விஜய்யின் ஸ்டைலான லுக்கிற்கு காரணம் ஆடை வடிவமைப்பாளராக ஜாய் கிரிஸில்டா தான்.
அதர்வா, கேத்ரின் தெரசா நடிப்பில் 2016ல் வெளிவந்த திரைப்படம் 'கணிதன்'. அப்படத்தில் ஆடை வடிவமைப்பாளராக ஜாய் கிரிஸில்டா பணியாற்றியுள்ளார்.
ரவி மோகன் நடிப்பில் வெளிவந்த ஜாம்பி திரைப்படம் 'மிருதன்'. அப்படத்தில் ரவி மோகனின் விதவிதமான ஆடையை ஜாய் கிரிஸில்டா வடிவமைத்தார்.
விஜய் சேதுபதி, லட்சுமி மேனன் நடிப்பில் வெளிவந்த ஹிட் திரைப்படம் 'றெக்க'. இருவரின் ஸ்டைலிஷ் லுக்கை ஜாய் கிரிஸில்டா வடிவமைத்தார்.
ஜிவி பிரகாஷ் உடன் மூன்றாவது முறையாக 'புரூஸ் லீ' படத்தில் ஆடை வடிவமைப்பாளராக ஜாய் கிரிஸில்டா பணியாற்றியுள்ளார்.


Click it and Unblock the Notifications