தமிழ்நாட்டை ஆண்ட முதலமைச்சர்கள்.. எந்த வயதில் அரியணை ஏறினர்? சுவாரசிய லிஸ்ட்!
அன்று முதல் இன்று வரை தமிழ்நாட்டை ஆண்ட முதலமைச்சர்கள் எந்த வயதில் முதல்வர் பதவியை ஏற்றுக்கொண்டனர் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1952ம் ஆண்டு தமிழ்நாட்டின் முதல் முதலமைச்சராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த சி. ராஜகோபாலச்சரி பதவி ஏற்றார். அப்போது அவரின் வயது 58 ஆகும்.
தமிழ்நாட்டின் இரண்டாவது முதலமைச்சராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கல்வி கண்திறந்து காமராஜர் பதவி ஏற்றார். அப்போது அவரின் வயது 51 ஆகும்.
காமராஜரை தொடர்ந்து தமிழ்நாட்டின் மூன்றாவது முதலமைச்சராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம். பக்தவச்சலம் பதவி வகித்தார். அப்போது அவரின் வயது 65 ஆகும்.
காங்கிரஸ் ஆட்சியை தொடர்ந்து திமுக கட்சி தமிழ்நாட்டை ஆண்டது. பேரறிஞர் அண்ணா முதலமைச்சர் ஆனார். அப்போது அண்ணாவின் வயது 58 ஆகும்.
ஆட்சியில் இருந்தபோதே அண்ணா உயிரிழந்த நிலையில் இரா. நெடுஞ்செழியன் 5 நாட்கள் முதலமைச்சர் பதவி வகித்தார். அப்போது அவரின் வயது 49 ஆகும்.
1969ம் ஆண்டு மு. கருணாநிதி முதலமைச்சர் பதவி ஏற்றார். அப்போது கருணாநிதியின் வயது 47 ஆகும்.
திமுகவில் இருந்து பிரிந்து அதிமுக என்ற கட்சியை தொடங்கிய எம்ஜிஆர், 1977ம் ஆண்டு முதல்வர் பதவி ஏற்றார். அப்போது அவரின் வயது 60 ஆகும்
எம்ஜிஆரின் மறைவை தொடர்ந்து விஎன் ஜானகி ராமச்சந்திரன் 23 நாட்கள் முதலமைச்சராக பதவி வகித்தார். அப்போது அவரின் வயது 60 ஆகும்
1991ல் ஜெயலலிதா முதன் முதலாக முதலமைச்சர் பதவி வகித்தார். அப்போது அவரின் வயது 43 ஆகும்.


Click it and Unblock the Notifications