Home / Photos
கமுக்கமாக.. சைடு பிசினஸில் கல்லாகட்டும் சின்னத்திரை நடிகைகளின் லிஸ்ட்.. இத்தனை பேரா?
By Chandru
சீரியல், ரியாலிட்டி ஷோக்களில் மட்டும் தான் நடிகைகள் நடித்து வருகின்றனர் என்று நாம் நினைத்திருக்க, பலர் சைடு பிசினஸில் லட்சங்களில் சம்பாரித்து வருகின்றனர். அதன்படி யார்? என்ன பிஸ்னஸ்? செய்கிறார்கள் என்பதை பார்ப்போம்.
1/7
Share
வெள்ளைத்திரை ஆனாலும் சின்னத்திரை ஆனாலும் நடிகர், நடிகைகளுக்கென தனிப்பட்ட வாழ்க்கை உண்டு என்பதை நாம் தெரிந்துகொள்ளவேண்டும். எப்போதும் எந்நேரமும் தங்களின் முழு கவனத்தை நடிப்பில் மட்டும் தான் வைத்திருப்பார்கள், நடிப்பை தவிர்த்து வேறு எதிலும் கவனம் செலுத்துவதற்கு நீரம் இருக்காது என நம்மில் பலரும் நினைத்திருப்போம்.
2/7
Share
ஆனால் சினிமாவை தவிர்த்து அவர்களுக்கென தனி உலகம் உண்டு. அதில் அவர்களுக்கு பிடித்ததை செய்து வருகின்றனர். அந்தவகையில் சினிமாவை தாண்டி தங்களுக்கென சொந்தமாக பிசினஸ் இருந்தால் நல்ல இருக்கும் என நடிகர்கள் பலர் சொந்தமாக பிசினஸ் செய்து வருகின்றனர். அந்தவகையில் சின்னத்திரை நடிகைகள் யாரெல்லாம் சொந்தமாக பிசினஸ் செய்து வருகின்றனர் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்..
3/7
Share
ஸ்ரீதேவி அசோக்: சின்னத்திரையில் வில்லி நடிகையாக மக்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை ஸ்ரீதேவி அசோக். குணச்சித்திர கதாபாத்திரத்தில் நடித்து தனக்கென தனி ஃபேன்ஸ் கூட்டத்தை கொண்டுள்ள ஸ்ரீதேவி, சொந்தமாக பேன்சி ஜுவல்லரி ஷாப் ஒன்றை நடத்தி வருகிறார்.
4/7
Share
ஸ்ருத்திகா: குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை ஸ்ருத்திகா. ஷூட்டிங் ஸ்பாட்டில் இவர் அடிக்கும் லூட்டி ஒவ்வொன்றும் மக்களை ஈர்க்கும் வகையில் இருக்கும். இவர் சில திரைப்படங்களில் ஹீரோயினாகவும் நடித்துள்ளார். குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு சினிமாவில் செம்ம பிஸியாக இருக்கும் ஸ்ருத்திகா, சொந்தமாக காஸ்மெட்டிக்ஸ் நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
5/7
Share
சைத்ரா ரெட்டி: சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் சீரியல் மூலம் மிகவும் பாப்புலர் ஆனவர் நடிகை சைத்ரா ரெட்டி. கயல் தொடரின் மூலம் கிடைத்த அமோக வரவேற்பு இவரை வெள்ளித்திரைக்கு கொண்டு சென்றது. அஜித்துடன் வலிமை படத்தில் நடித்துள்ளார். சின்னத்திரையில் ஸ்டார் நடிகையாக வலம் வரும் சைத்ரா ரெட்டி சொந்தமாக பியூட்டி பார்லர் ஒன்றை நடத்தி வருகிறார்.
6/7
Share
வனிதா விஜயகுமார்: இவரை தெரியாதவர்கள் யாரும் இருக்கமுடியுமா . விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மிக பிரபலமானவர் நடிகை வனிதா விஜயகுமார். பேஷன் டிசைனிங் ஷாப்ல், அழகு நிலையம் உள்ளிட்ட பல பிசினஸ் செய்து வருகிறார்.
7/7
Share
விஜே மகேஸ்வரி: தொலைக்காட்சி தொகுப்பாளனாக மக்கள் மனதில் இடம் பிடித்தவர் நடிகை விஜே மகேஸ்வரி. பின்னர் விஜய் டிவியின் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று இளைஞர்களின் மனதையும் கொள்ளையடித்தார். இவர் சொந்தமாக உணவகம் ஒன்றையும், அழகு நிலையம் ஒன்றையும் நடத்தி வருகிறார்.


Click it and Unblock the Notifications