Home / Photos
PHOTOS : உலகின் மிக விலையுயர்ந்த 10 பொருட்களை பற்றி தெரியுமா?.. சுவாரசிய லிஸ்ட் இதோ!
By Chandru
உலகின் மிக விலையுயர்ந்த 10 பொருட்களை பற்றி தெரியுமா?.. சுவாரசிய லிஸ்ட்
1/10
Share
Yacht History Supreme : Yacht History Supreme சொகுசு படகு உலகின் மிக விலையுயர்ந்த பொருட்களில் முதல் இடத்தில் உள்ளது, இதன் மதிப்பு சுமார் 4.8 பில்லியன் டாலர்கள் ஆகும். உலகப் புகழ்பெற்ற இங்கிலாந்தைச் சேர்ந்த வடிவமைப்பாளரான ஸ்டூவர்ட் ஹியூஸ் வடிவமைத்த இந்தப் படகை முடிக்க கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் ஆனது. இந்த விலையுயர்ந்த 100 அடி கப்பலை மலேசிய தொழிலதிபர் ஒருவர் 4.5 பில்லியன் டாலர்களுக்கு வாங்கியுள்ளார்.
2/10
Share
ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி : ஹப்பிள் விண்வெளி தொலைநோக்கி விலையுயர்ந்த பொருட்களின் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது.இந்த விண்வெளி தொலைநோக்கி உலகின் மிக விலையுயர்ந்த தொலைநோக்கி என்ற கின்னஸ் சாதனை படைத்துள்ளது.இது முதன்முதலில் 1990 ஆம் ஆண்டு விண்ணில் ஏவப்பட்டது.
3/10
Share
ஆன்டிலியா : மும்பையில் அமைந்துள்ள ஆண்டிலியா, ஆசியாவின் மிகப்பெரிய கோடீஸ்வரரான முகேஷ் அம்பானிக்கு சொந்தமானது. இந்த பிரமாண்டமான 27 மாடி வீட்டில் மூன்று ஹெலிபேடுகள், விமான போக்குவரத்து கட்டுப்பாடு அறைகள், 168 கார்கள் நிறுத்தும் இடம், 9 அதிவேக லிஃப்ட், 50 இருக்கைகள் கொண்ட தியேட்டர் மற்றும் பல சொகுசு வசதிகள் உள்ளன. இது 8.0 ரிக்டர் அளவு நிலநடிக்கும் வந்தாலும் அசராமல் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
4/10
Share
வில்லா லியோபோல்டா : வில்லா லியோபோல்டா ஆண்டிலாவுக்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது மிக விலையுயர்ந்த வீடு ஆகும். லியோபோல்டா பிரெஞ்சு ரிவியராவில் கட்டப்பட்டது, இது இரண்டாம் உலகப் போரின் போது மருத்துவ உதவிகளுக்காக கட்டப்பட்டது. இது எட்மண்ட் மற்றும் லில்லி சஃப்ரா ஆகியோருக்கு சொந்தமானது.
5/10
Share
'The Card Players' ஓவியம் : இந்த ஓவியம் பிரபல பிரெஞ்சு கலைஞரான பால் செசானின் கலைப்படைப்பு ஆகும், இது தற்போது கத்தாரின் அல் தானியின் அரச குடும்பத்திற்கு சொந்தமானது. இந்த அரிய ஓவியத்தை சுமார் 275 மில்லியன் டாலர்கள் மதிப்புடையதாகவும்.
6/10
Share
'Garçon à la pipe' ஓவியம் : இந்த அற்புதமான ஓவியம் 1905 ஆம் ஆண்டில் ஓவிய மேதை பாப்லோ பிக்காசோவால் வரையப்பட்டது.பிக்காசோ இதை வரைந்தபோது அவருக்கு வயது வரும் 24 ஆகும்.மேலும் ஓவிய கலை சந்தையில் தோன்றிய கலைஞரின் சிறந்த ஆரம்பகால படைப்புகளில் ஒன்றாக இது கருதப்பட்டது.
7/10
Share
L’Incomparable வைர நெக்லஸ் : L'Incomparable Diamond Necklace சுமார் 55 மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள உலகின் விலையுயர்ந்த நெக்லஸ் ஆகும்.இது 407.48 காரட் வெள்ளை வைரம் மற்றும் 230 காரட் எடையுள்ள 90 வெள்ளை வைரங்கள் ஆகியவற்றால் ஆனது. இது கிட்டத்தட்ட 30 ஆண்டுகளுக்கு முன்பு காங்கோவில் ஒரு சிறுமியால் கண்டுபிடிக்கப்பட்டது.
8/10
Share
1963 ஃபெராரி ஜி.டி.ஓ : 1963 ஃபெராரி ஜி.டி.ஓ உலகின் மிக விலையுயர்ந்த கார் ஆகும்.இன்றுவரை தயாரிக்கப்பட்ட 39 GTOக்களில், இந்த குறிப்பிட்ட GTO 1963 இல் ஜீன் குய்செட் இயக்கிய டூர் டி பிரான்ஸ் கார் பந்தயத்தில் வென்றுள்ளது.இத மதிப்பு சுமார் 52 மில்லியன் டாலர்கள் ஆகும்.
9/10
Share
201-காரட் ரத்தினக் கடிகாரம் : ஆடம்பர கடிகாரங்களில் ஆர்வம் கொண்டவர்கள் எப்போதும் தனித்துவமான, அரிதான மற்றும் விலையுயர்ந்த கை கடிகாரங்களை தேடுகிறார்கள். இந்த 201-காரட் ரத்தினக் கடிகாரம், சிறந்த கடிகாரம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கான அனைத்துத் தேவைகளுக்கும் பொருந்துகிறது.இது சோபார்ட் வாட்ச்மேக்கர்களால் செய்யப்பட்டது. 874 வைரங்கள் கொண்ட 201 காரட் மதிப்புள்ள ரத்தினக் கற்களும் அதில் இதய வடிவிலான ஆடம்பரமான வைரங்களும் பதிக்கப்பட்டுள்ளன.


Click it and Unblock the Notifications