Home / Photos
PHOTOS: 2023: இந்த ஆண்டு அதிகமான ரசிகர்களை ஈர்த்த டாப் 10 சீரியல் நடிகைகள்.. யார் யாருன்னு பாத்தீங்களா?
By Chandru
இந்த ஆண்டு தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்த தமிழ் சீரியல் நடிகைகளின் லிஸ்ட் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் விஜய் டிவி, சன் டிவி சீரியல்களில் நடித்த முன்னணி நடிகைகள் இடம் பிடித்துள்ளனர். அந்தவகையில் இந்த ஆண்டு ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த டாப் 10 சீரியல் நடிகைகள் யார் யாருன்னு பார்ப்போம்.
1/11
Share
இந்த ஆண்டு தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்த தமிழ் சீரியல் நடிகைகளின் லிஸ்ட் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் விஜய் டிவி, சன் டிவி சீரியல்களில் நடித்த முன்னணி நடிகைகள் இடம் பிடித்துள்ளனர். அந்தவகையில் இந்த ஆண்டு ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த டாப் 10 சீரியல் நடிகைகள் யார் யாருன்னு பார்ப்போம்.
2/11
Share
சுஜிதா: விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து ஒட்டுமொத்த சின்னத்திரை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை சுஜிதா. தமிழில் ஏராளமான சீரியல்களில் நடித்துள்ளார். தற்போது இந்த டாப் 10 லிஸ்டில் இடம் பிடித்துள்ளார் சுஜிதா.
3/11
Share
மதுமிதா ஷெட்டி: சன் டிவியில் ஒளிபரப்பாகும் பல சீரியல்களில் டிஆர்பிஎல் முதல் இடத்தில் இருப்பது எதிர்நீச்சல் சீரியல் தான். மற்ற சீரியல்களை காட்டிலும் எதிர்நீச்சல் சீரியல்களுக்கென மிக பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. அந்தவகையில் எதிர்நீச்சல் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பவர் நடிகை மதுமிதா ஷெட்டி. ஜனனி கதாபாத்திரத்தில் நடித்து வரும் மதுமிதாவுக்கு மிக பெரிய ரசிகர்கள் கூட்டமே உள்ளது. தற்போது இந்த டாப் 10 லிஸ்டில் மதுமிதாவுக்கு இடம் பிடித்துள்ளார்.
4/11
Share
சுசித்ரா ஷெட்டி: விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் கதாநாயகியாக கலக்கி வருபவர் நடிகை சுசித்ரா ஷெட்டி. பாக்கிய என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் பட்டிதொட்டி எங்கும் மிகவும் பிரபலமாக வலம் வருகிறார். டாப் 10 சீரியல் நடிகைகளின் லிஸ்டில் சுசித்ரா ஷெட்டி இடம் பிடித்துள்ளார்.
5/11
Share
கோமதி பிரியா: ஓவியா என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை கோமதி பிரியா. தமிழில் குறைவான சீரியல்களில் மட்டுமே நடித்திருந்தாலும் சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரகடிக்க ஆசை சீரியல் மூலம் மிகவும் பிரபலமானார். சின்னத்திரை ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த கோமதி இந்த டாப் 10 லிஸ்டில் ஒருவராக இடம் பிடித்துள்ளார்.
6/11
Share
ஹரிப்பிரியா இசை: தொகுப்பாளனியாக தொலைக்காட்சியில் அறிமுகமானார் நடிகை ஹரிப்பிரியா. அதைப்பின்னர் 2016 ஆம் ஆண்டு தவணை முறையில் வாழ்க்கை என்ற சீரியலில் நடித்து சின்னத்திரை நடிகையாக என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து பிரியமானவள், லட்சுமி வந்தாச்சு, சரவணன் மீனாட்சி, கல்யாணம் முதல் காதல் வரை, விதி ஆகிய சீரியல்களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர். அந்தவகையில் தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறார் ஹரிப்பிரியா. ரசிகர்களை ஈர்த்த டாப் 10 சீரியல் நடிகைகளில் இவரும் ஒருவர்.
7/11
Share
சைத்ரா ரெட்டி: ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பான 'யாரடி நீ மோகினி' சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் நடிகை சைத்ரா ரெட்டி. அதன்பின்னர் சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் சீரியலில் கதாநாயகியாக கலக்கி சன் டிவியின் நம்பர் ஒன் சின்னத்திரை நடிகையாக வலம் வருகிறார். ரசிகர்களின் மனதை கொள்ளையடித்த இந்த லிஸ்டில் சைத்ரா ரெட்டியும் ஒருவர் ஆவார்.
8/11
Share
கேப்ரெல்லா செல்லஸ்: சன் டிவியில் ஒளிபரப்பாகும் சுந்தரி சீரியலில் கதாநாயகியாக நடித்து சின்னத்திரையில் மிகவும் பிரபலமானவர் கேப்ரெல்லா செல்லஸ். சின்னத்திரையில் அறிமுகமாவதற்கு முன் வெள்ளித்திரையில் பல படங்களில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அந்தவகையில் டாப் 10 சீரியல் நடிகைகளின் லிஸ்டில் கேப்ரெல்லா இடம் பிடித்துள்ளார்.
9/11
Share
கனிகா: வெள்ளித்திரையில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை கனிகா. திருமணத்திற்கு பின் படங்களில் பெரிதும் இன்ட்ரெஸ்ட் காட்டாத கனிகா தமிழ் சின்னத்திரையில் என்று கொடுக்க தொடங்கினார். அந்தவகையில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து வருகிறார் கனிகா. இந்தநிலையில் இந்த ஆண்டு அதிகமான ரசிகர்களை ஈர்த்த டாப் 10 சீரியல் நடிகைகளின் லிஸ்டில் ஒருவராக கனிகா இருந்து வருகிறார்.


Click it and Unblock the Notifications