Home / Photos
நொடிக்குநொடி சஸ்பென்ஸ்.. த்ரில்லிங் நிறைந்த டாப் 5 மலையாள படங்களின் லிஸ்ட்.. மிஸ் பண்ணிடாதீங்க!
By Chandru
த்ரில்லிங், சஸ்பென்ஸ் நிறைந்த மலையாள படங்களை தேடுறீங்களா.. உங்களுக்கான பதிவு தான் இது. டாப் 5 மலையாள படங்கள் எது எது என்பதை பார்ப்போம்.
1/5
Share
2019ம் ஆண்டு பிரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான படம் லூசிஃபர். அரசியலில் நடக்கும் சூழ்ச்சிகளை த்ரில்லிங்காக காட்டி பார்வையாளர்ளை இருக்கையின் நுனியில் அமரவைக்கும் படம். வீக் எண்டை என்ஜாய் பண்ண சிறந்த மலையாள படம்.
2/5
Share
2022ம் ஆண்டு பிரித்விராஜ் நடிப்பில் வெளியான அரசியல் த்ரில்லிங் படம் ஜன கண மன. கல்லூரி மாணவர்கள் போராட்டம், அரசியல் சூழ்ச்சி என படம் முழுக்க சஸ்பென்ஸாகவே இருக்கும்.
3/5
Share
மலையாள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி நடிப்பில் வெளியான படம் கண்ணூர் ஸ்குவாட். வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் படம் சூப்பர் டூப்பர் ஹிட்டானது. மர்மங்களை கண்டறியும் போலீஸ் என்னென்ன சிக்கல்களை சத்துகிறது என்பது தான் கதை. இப்படத்தை டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.
4/5
Share
2020ம் ஆண்டு டோவினோ தாமஸ் நடிப்பில் வெளியான படம் ஃபாரன்சிக். படத்தின் பெயருக்கு ஏற்றார் போல் காணாமல் போகும் பெண் குழந்தைகளை கண்டறியும் போலீசின் கதை தான் இது. ஒவ்வொரு காட்சியும் சஸ்பென்ஸ் நிறைந்ததாக இருக்கும்.
5/5
Share
2016ம் ஆண்டு நடிகை மஞ்சுவாரியர், குஞ்சாக்கோ போபன் உள்ளிட்டோர் நடிப்பில் வெளியான படம் வேட்டா. நொடிக்குநொடி திரில்லிங் சஸ்பென்ஸ் நிறைந்த இப்படத்தை யூடியூப் தளத்தில் பார்க்கலாம்.


Click it and Unblock the Notifications