Home / Photos
அதிகளவு அணு ஆயுதங்கள் வைத்திருக்கும் நாடுகளின் டாப் 6 பட்டியல்.. இந்தியா, பாகிஸ்தானிடம் எத்தனை உள்ளது? பாருங்க!
By Chandru
மனித குலத்துக்கே பேராபத்தை ஏற்படுத்தும் ஆயுதமாக அணு ஆயுதம் உள்ளது. காரணம், அணு ஆயுதம் வெடித்து சிதறி அதில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சானது மனித உடலுக்கு பேரிழப்பை ஏற்படுத்தும். 1945ம் ஆண்டு ஜப்பான் மீது அமெரிக்க வீசிய லிட்டில் பாய் மற்றும் ஃபெட் மேன் ஆகிய இரண்டு அணு குண்டுகள் மிக பெரிய அழிவை ஏற்படுத்தியது. அதில் இருந்து மீண்டு வந்த ஜப்பான், இன்றும் அதன் தாக்கத்தை உணர்வதாக கூறுகின்றனர். இப்படியாக இந்த பயங்கரமான அணு ஆயுதத்தை வளர்ந்த நாடுகள் சில தங்களின் பாதுகாப்புக்காக சேமித்து வைத்துள்ளது. மேலும் அணு ஆயுதத்தின் இருப்பை கொண்டு அந்நாட்டின் பலம் கணக்கிடப்படுகிறது. அந்த வகையில் அதிகளவு அணு ஆயுதங்கள் வைத்திருக்கும் டாப் 6 நாடுகள் என்னென்ன? அதன் இருப்பு எவ்வளவு என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/6
Photo Credit: oneindia
Share
அதிகளவு அணு ஆயுதங்கள் வைத்திருக்கும் நாடுகளின் பட்டியலில் ரஷ்யா முதல் இடத்தில் உள்ளது. ரஷ்யா சுமார் 5,449 அணு ஆயுதங்கள் வைத்துள்ளது. உக்ரைன் நாட்டுடன் போர் நடத்திய ரஷ்யா, தரைவழி, வான்வழி தாக்குதல் மட்டுமே நடத்தியது.
2/6
Photo Credit: oneindia
Share
இரண்டாம் இடத்தில் அமெரிக்கா உள்ளது. 5277 அணு ஆயுதங்களுடன் அமெரிக்கா இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. 1945ம் ஆண்டு முதன் முதலில் ஜப்பான் மீது அணு ஆயுத தாக்குதலை அமெரிக்க நடத்தியது குறிப்பிடத்தக்கது.
3/6
Photo Credit: oneindia
Share
மூன்றாம் இடத்தில் சீனா உள்ளது. சீனாவிடம் சுமார் 600 அணு ஆயுதங்கள் உள்ளன. ரஷ்யா, அமெரிக்காவை ஒப்பிடுகையில் சீனாவின் எண்ணிக்கை மிகவும் குறைவு.
4/6
Photo Credit: oneindia
Share
நான்காம் இடத்தில் பிரான்ஸ் நாடு உள்ளது. பிரான்சிடம் சுமார் 290 அணு ஆயுதங்கள் உள்ளன. சீனாவுடன் ஒப்பிடுகையில் இதன் எண்ணிக்கை பாதியளவு கூட இல்லை.
5/6
Photo Credit: oneindia
Share
ஐந்தாம் இடத்தில் இங்கிலாந்து உள்ளது. இங்கிலாந்திடம் சுமார் 225 அணு ஆயுதங்கள் உள்ளன.
6/6
Photo Credit: oneindia
Share
ஆறாம் இடத்தில் இந்தியா உள்ளது. 180 அணு ஆயுதங்கள் இந்திய ராணுவத்திடம் உள்ளது. அதேபோல் அண்டை நாடான பாகிஸ்தானிடம் 170 அணு ஆயுதங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications