சென்னையின் நம்பர் ஒன் பணக்காரர் யாருன்னு தெரியுமா? டாப் 7 கோடீஸ்வரர்கள் இவங்க தான்..
இந்தியளவில் மிக பெரிய கோடீஸ்வரர் யார் என்பதை நாம் பார்த்திருப்போம்.. ஆனால் நம்ம சென்னையில் உள்ள நம்பர் ஒன் பணக்காரர் யார் என்று தெரியுமா? சென்னையில் உள்ள டாப் 7 கோடீஸ்வரர்கள் யார் யார் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
சென்னையின் நம்பர் ஒன் கோடீஸ்வராக இருப்பவர் சிவ் நாடார். HCL நிறுவனத்தின் நிறுவனரான இவரின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 2.90 லட்சம் கோடி ரூபாய் ஆகும்.
சென்னையில் உள்ள இரண்டாவது பெரிய பணக்காரர் கலாநிதி மாறன். சன் டிவி, கே டிவி, சூரியன் FM, சன் பிக்சர்ஸ் என உடைக்கத் துறையில் நம்பர் ஒன்னாக இருந்து வருகிறார். அதேபோல் இவரின் மகள் காவ்யா மாறன் 'சன்ரைசர்ஸ் ஹைதராபாத்' ஐபிஎல் அணியை நிர்வகித்து வருகிறார். கலாநிதி மாறனின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 25 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும்.
இந்த பட்டியலில் 3ம் இடத்தில் அருண் புதூர் உள்ளார். சாமானிய மனிதனும் கோடீஸ்வரன் ஆகலாம் என்பதை நிரூபித்து காட்டியவர். மென்பொருள் நிறுவனத்தை நடத்தி வரும் இவரின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 11,600 கோடி ரூபாய் ஆகும்.
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் முன்னாள் தலைவராகவும், சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் முன்னாள் தலைவராகவும் இருந்தவர் என். ஸ்ரீனிவாசன். அதேபோல் சென்னை சூப்பர் கிங்ஸ் ஐபிஎல் அணியின் உரிமையாளரும் இவரே. இவரின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 9,130 கோடி ரூபாய் ஆகும்.
டிவிஎஸ் நிறுவனத்தின் தலைவர் வேணு ஸ்ரீனிவாசன், இந்த பட்டியலில் 5ம் இடத்தை பிடித்துள்ளார். இருசக்கர வாகன உற்பத்தியில் சிறந்து விளங்கும் வேணு ஸ்ரீனிவாசனின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 8,300 கோடி ரூபாய் ஆகும்.
இந்த பட்டியலில் 6ம் இடத்தில் கல்யாண் ஜூவல்லர்ஸ் நிறுவனத்தின் தலைவர் டி.எஸ். கல்யாணராமன் உள்ளார். இவரின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 7,055 கோடி ரூபாய் ஆகும்.
சென்னையில் உள்ள டாப் 7 கோடீஸ்வரர்கள் பட்டியலில் 7ம் இடத்தில் டாக்டர் ஜி. பக்தவத்சலம் உள்ளார். கேஜி மருத்துவமனை, கேஜி கல்வி நிறுவனம் ஆகியவற்றின் தலைவராக உள்ளார். இவரின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 6,225 கோடி ரூபாய் ஆகும்.


Click it and Unblock the Notifications