இந்தியாவின் டாப் 8 பணக்கார யூடியூபர்கள் யாரெல்லாம் தெரியுமா? அசரவைக்கும் சொத்து மதிப்பு!
திறமை இருந்தும் சரியான அங்கீகாரம் இல்லாமல் தவிக்கும் நபர்களுக்கு யூடியூப் சிறந்த மேடை என்றே சொல்லலாம். பலரின் திறமைகளை வீடியோக்கள் மூலமாக வெளிக்காட்டி வரும் இந்த யூடியூப் நிறுவனம் அதிகப்படியான ஃபாலோவர்ஸ் மற்றும் வியூஸ் கொண்டவர்களுக்கு சம்பளம் கொடுத்து வருகிறது. அந்த வகையில் யூடியூப் வழியாக லட்சக்கணக்கான பார்வையாளர்களை ஈர்த்து கோடிக்கணக்கில் சம்பாதிக்கும் இந்தியாவின் டாப் 8 யூடியூபர்கள் யார் யார் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
இந்தியாவின் டாப் 8 பணக்கார யூடியூபர்கள் லிஸ்டில் 8ம் இடத்தில் சந்தீப் மகேஸ்வரி உள்ளார். இவர் தனது பெயரிலையே சொந்தமாக யூடியூப் தளத்தை நடத்தி வருகிறார். மோட்டிவேஷினால் வீடியோக்களை பகிர்ந்து வரும் சந்தீப்பின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 41 கோடி ரூபாய் என கூறுகின்றனர்.
இந்த டாப் 8 லிஸ்டில் 7ம் இடத்தில் நிஷா மதுலிகா உள்ளார். இவர் தனது பெயரிலையே சொந்தமாக யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். சமையல் வீடியோக்களை பகிர்ந்து அதன் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். நிஷா மதுலிகாவின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 43 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.
இந்த டாப் 8 லிஸ்டில் 6ம் இடத்தில் எல்விஷ் யாதவ் உள்ளார். இவர் தனது பெயரிலையே சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றை நடத்தி வருகிறார். சுமார் 15.7 மில்லியன் யூடியூப் ஃபாலோவர்ஸ் வைத்துள்ள எல்விஷ்வின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 50 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.
இந்தியாவின் டாப் 8 பணக்கார யூடியூபர்கள் லிஸ்டில் 5ம் இடத்தில் அஜய் நகர் உள்ளார். carryminati என்ற யூடியூப் தளத்தை நடத்தி வருகிறார். காமெடி, கேமிங் வீடியோக்களை பகிர்ந்து வரும் அஜய்யின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 50 கோடி ரூபாய் என கூறுகின்றனர்.
இந்த டாப் 8 லிஸ்டில் 4ம் இடத்தில் ரன்வீர் அல்லாபாடியா உள்ளார். இவர் தனது பெயரிலையே சொந்தமாக யூடியூப் சேனலை நடத்தி வருகிறார். சுமார் 10.5 மில்லியன் யூடியூப் ஃபாலோவர்ஸ் வைத்துள்ள ரன்வீரின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 58 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.
இந்த லிஸ்டில் 3ம் இடத்தில் அமித் பதானா உள்ளார். இவர் தனது பெயரிலையே சொந்தமாக யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். சுமார் 24.6 மில்லியன் யூடியூப் ஃபாலோவர்ஸ் வைத்துள்ள அமித்தின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 80 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.
இந்த லிஸ்டில் 2ம் இடத்தில் புவன் பாம் உள்ளார். BB Ki Vines என்ற பெயரில் சொந்தமாக யூடியூப் சேனல் நடத்தி வருகிறார். சுமார் 26.6 மில்லியன் யூடியூப் ஃபாலோவர்ஸ் வைத்துள்ள புவனின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 122 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.
இறுதியாக, இந்தியாவின் டாப் 8 பணக்கார யூடியூபர்கள் லிஸ்டில் முதல் இடத்தில் கௌரவ் சவுத்ரி உள்ளார். Technical Guruji என்ற பெயரில் சொந்தமாக யூடியூப் சேனல் நடத்தி அதன் மூலம் டெக்னாலஜி வீடியோக்களை பகிர்ந்து வருகிறார். சுமார் 23.7 மில்லியன் யூடியூப் ஃபாலோவர்ஸ் வைத்துள்ள கௌரவின் மொத்த சொத்து மதிப்பு சுமார் 356 கோடி ரூபாய் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications