Home / Photos
PHOTOS: அல்ட்ரா மாடல் அழகி டூ சினிமா நடிகை.. தமிழில் அறிமுகமான டாப் மாடல் அழகிகளின் லிஸ்ட்.. யாருன்னு பாத்தீங்களா?
By Chandru
தமிழ் சினிமாவில் வாரிசு நடிகைகளுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கப்பட்டு அவர்களுக்கு மட்டுமே பட வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது புதுமுக நடிகைகளுக்கு திரை துறையினர் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். சோசியல் மீடியாக்களில் பிரபலமானவர்கள், மாடலிங் துறையில் கலக்கியவர் என தேடிப்பிடித்து ஹீரோயின் வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் மாடலிங் துறையில் இருந்து தற்போது தமிழ் சினிமாவில் ஜொலிக்கும் இளம் நடிகைகள் யார் யாரென்று பார்ப்போம்..
1/6
Share
தமிழ் சினிமாவில் வாரிசு நடிகைகளுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுக்கப்பட்டு அவர்களுக்கு மட்டுமே பட வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது புதுமுக நடிகைகளுக்கு திரை துறையினர் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். சோசியல் மீடியாக்களில் பிரபலமானவர்கள், மாடலிங் துறையில் கலக்கியவர் என தேடிப்பிடித்து ஹீரோயின் வாய்ப்புகள் கொடுக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் மாடலிங் துறையில் இருந்து தற்போது தமிழ் சினிமாவில் ஜொலிக்கும் இளம் நடிகைகள் யார் யாரென்று பார்ப்போம்..
2/6
Share
மீனாக்ஷி சௌத்ரி: தென்னிந்திய மடலிங்கில் மிகவும் பிரபலமானவர் மீனாக்ஷி சௌத்ரி. மிஸ் ஃபெமினா ஹரியானா, மிஸ் இந்திய அழகி போட்டி, சர்வதேச அழகி போட்டி என பல மாடலிங் போட்டிகளில் முதல் மற்றும் இரண்டாம் இடத்தை பிடித்தவர் மீனாக்ஷி சௌத்ரி. மடலிங்கில் கலக்கிய மீனாக்ஷிக்கு 2019 ஆம் ஆண்டு ஹிந்தி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்து சினிமாவில் என்ட்ரி கொடுத்தார், அதன்பின்னர் தெலுங்கு சினிமாவிலும் அறிமுகமானார். பின்னர் தமிழில் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான கொலை படத்தில் ஹீரோயினாக நடித்து தமிழ் சினிமாவிலும் இளம் நடிகையாக அறிமுகமாகியுள்ளார், மேலும் மீனாக்ஷி சௌத்ரிக்கு ரசிகர்கள் நல்ல வரவேற்பும் கொடுத்துள்ளனர்.
3/6
Share
காவ்யா தாபர்: இந்திய அளவில் மாடலிங் துறையில் டாப் மாடலாக வலம் வந்தவர் நடிகை காவ்யா தாபர். இதன் மூலம் சினிமா வாய்ப்புகள் காவ்யாவுக்கு தேடி வந்தது. தெலுங்கு சினிமாவில் பல படங்களில் கவர்ச்சி காட்டி நடித்து இளைஞர்கள் மத்தியில் டாப் நடிகையாக வலம் வருகிறார். அதன்பின்னர் விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான பிச்சைக்காரன் 2 படத்தில் ஹீரோயினாக நடித்து கவர்ச்சியில் கலக்கினார். இப்படத்தின் மூலம் தமிழில் ஹீரோயினாக என்ட்ரி ஆனா காவ்யாஒட்டுமொத்த இளைஞர்கள் கூட்டத்தின் மனதையும் கொள்ளையடித்துவிட்டார்.
4/6
Share
சுஷ்மா ராஜ்: பிரபல மாடல் அழகியான சுஷ்மா ராஜ் கன்னட படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பின்னர் கடந்த 2015 ஆம் ஆண்டு விஜய் ஆன்டனி நடிப்பில் காமெடி படமாக வெளியான இந்தியா பாகிஸ்தான் படத்தில் ஹீரோயினாக நடித்து தமிழில் அறிமுகமாகியுள்ளார். இப்படத்தை தொடர்ந்து தமிழில் வேறு எந்த படத்திலும் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை.
5/6
Share
ஆஷிமா நர்வால்: பிரபல மாடல் அழகியல் ஆஷிமா நர்வால் தெலுங்கு சினிமாவில் தனது திரை பயணத்தை ஆரம்பித்தார். தெலுங்கில் நல்ல வரவேற்பு கிடைக்க தமிழில் அறிமுகமாக வாய்ப்புகள் தேடி வந்தது. விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான கொலைகாரன் என்ற படத்தில் கதநாயகியாக நடித்து தமிழில் கவர்ச்சி நடிகையாக வலம் வருகிறார். தற்போது தமிழில் சில படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார்.
6/6
Share
ஷில்பா மஞ்சுநாத்: மாடல் அழகியான ஷில்பா மஞ்சுநாத் முங்காரு ஆண் 2 என்ற கன்னட படத்தின் மூலம் சினிமா துறையில் என்ட்ரி ஆனார். அதைத்தொடர்ந்து விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான யமன் என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து காளி, இஸ்பதே ராஜாவும் இதய ராணியும், பேரழகி ஐஎஸ்ஓ, தேவதாஸ் பிரதர்ஸ், வெப் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.


Click it and Unblock the Notifications