Home / Photos
PHOTOS : 2022ல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த டாப் வெப் சீரிஸ் எதுன்னு தெரியுமா?.. லிஸ்ட் இதோ..
By Chandru
வெள்ளித்திரைக்கு இணையாக ஓடிடி தளத்தில் வெளியாகவும் வெப் தொடர்களுக்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.கிரைம், த்ரில்லர், காதல், ரொமான்ஸ் என அனைத்து வகையிலும் வெப் சீரிஸ் வெளியாக்குகின்றது.தமிழ் சினிமாவின் முன்னணி பிரபலங்களும் வெப் தொடர்களில் நடிப்பதை விரும்புகின்றனர்.
1/10
Share
வெள்ளித்திரைக்கு இணையாக ஓடிடி தளத்தில் வெளியாகும் வெப் தொடர்களுக்கு சினிமா ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது.கிரைம், த்ரில்லர், காதல், ரொமான்ஸ் என அனைத்து வகையிலும் வெப் சீரிஸ் வெளியாகுகின்றது.தமிழ் சினிமாவின் முன்னணி பிரபலங்களும் வெப் தொடர்களில் நடிப்பதை விரும்புகின்றனர்.
2/10
Share
இந்தவகையில் இந்த ஆண்டு ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த வெப் சீரிஸ் எவை எவை என பார்ப்போம்.மேலும் உங்களுக்கு பிடித்தமான வெப் தொடர்கள் இந்த பட்டியலில் உள்ளதா என பாருங்கள்.
3/10
Share
முதல் இடத்தில் நடிகர் விமல் நடிப்பில் வெளியான "விலங்கு" வெப் தொடர் உள்ளது.கிரைம், த்ரில்லர் கதையாக எடுக்கப்பட்ட இந்த வெப் சீரிஸ் சினிமா ரசிகர்கள் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.இனியா, பால சரவணன், முனிஷ்காந்த் மற்றும் ஆர்.என்.ஆர்.மனோகர் உள்ளிட்டோர் இதில் நடித்துள்ளனர்.
4/10
Share
இரண்டாம் இடத்தில் இயக்குநர் ராஜ்குமார் இயக்கத்தில் வெளியான "பேட்டைகாளி" வெப் சீரிஸ் உள்ளது.ஆஹா ஓடிடி தளத்தில் வெளியான இந்த வெப் தொடரை இயக்குநர் வெற்றிமாறன் தயாரித்துள்ளார்.ஜல்லிக்கட்டு காளையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த தொடரில் கலையரசன், கிஷோர், வேல ராமமூர்த்தி மற்றும் ஷீலா ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
5/10
Share
மூன்றாம் இடத்தில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான "சுழல்" வெப் சீரிஸ் உள்ளது.அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் கிரைம், த்ரில்லர் வெப் தொடராக வெளியிடப்பட்டது.கதிர், ஐஸ்வர்யா ராஜேஷ், பார்த்திபன், ஹரிஷ் உத்தமன் உள்ளிட்ட முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர்.
6/10
Share
நான்காம் இடத்தில் "வதந்தி" வெப் சீரிஸ் உள்ளது.அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியான இந்த வெப் தொடரில் சஞ்சனா, விவேக் பிரசன்னா, எஸ்.ஜே. சூர்யா, கமீலா நாசர், லைலா உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ளனர்.
7/10
Share
ஐந்தாம் இடத்தில் "தமிழ் ராக்கர்ஸ்" வெப் சீரிஸ் உள்ளது.சோனி லைவ் ஓடிடி தளத்தில் த்ரில்லர் வெப் தொடராக வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது.நடிகர் அருண் விஜய், வாணி போஜன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க துணை நடிகர்களாக ஐஸ்வர்யா மேனன், வினோதினி வைத்தியநாதன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
8/10
Share
ஆறாம் இடத்தில் "பேப்பர் ராக்கெட்" வெப் சீரிஸ் உள்ளது.ஜி5 ஓடிடி தளத்தில் ரொமான்டிக் காமெடி வெப் தொடராக வெளியானது.காளிதாஸ் ஜெயராம், தன்யா ரவிச்சந்திரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க, ரேணுகா, கருணாகரன் மற்றும் பலர் துணை நடிகர்களாக நடித்துள்ளனர்.
9/10
Share
ஏழாம் இடத்தில் "பிங்கர்டிப் சீசன் 2" வெப் சீரிஸ் உள்ளது.தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான நடிகர் பிரசன்னா, ரெஜினா கசாண்ட்ரா மற்றும் அபர்ணா பாலமுரளி உள்ளிட்டோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.ஜி5 ஓடிடி தளத்தில் வெளியான இந்த வெப் தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.


Click it and Unblock the Notifications