சொதப்பிய தக் லைஃப்.. தோல்வியை சமாளிக்க வெற்றிமாறனுடன் கூட்டணி வைத்துள்ள சிம்பு.. அடுத்தடுத்து கமிட்டாகியுள்ள படங்களின் லிஸ்ட்!
சிம்பு, கமல் நடிப்பில் கடந்த ஜூன் மாதம் 5ம் தேதி தியேட்டரில் ரிலீஸான திரைப்படம் 'தக் லைஃப்'. 38 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் கமல்-மணிரத்னம் கூட்டணி உருவானது. படத்தின் போஸ்டர், ட்ரைலர் வெளியாகி ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்தது. அதேபோல் சிம்பு முதன் முறையாக மணிரத்னத்துடன் கூட்டணி அமைத்தார். அதிக பட்ஜெட்டில் உருவான இப்படம் பெரும் ஆராவாரத்துடன் வெளியாகி எதிர்பார்ப்பை தொம்சம் செய்தது. விமர்சனம் ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் படுதோல்வியடைந்தது. மணிரத்னம் படமா இது? என ரசிகர்கள் செம ஷாக்காயினர். சிம்புவின் கதாபாத்திரம் ரசிகர்களை பெரிதும் ஈர்த்தது, இருப்பினும் படம் பிளாப்.. பட தோல்வியை தொடர்ந்து சிம்பு அடுத்தடுத்து கமிட்டாகியுள்ள படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
தக் லைஃப் தோல்வியை தொடர்ந்து சிம்பு-வெற்றிமாறன் கூட்டணி உருவாகியுள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் சிம்பு நடித்து வரும் புகைப்படங்கள் வெளியாகி சிம்பு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. இப்படத்தில் நெல்சன் கேமியோ ரோலில் நடித்து வருகிறாராம். இப்படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.
வெற்றிமாறன் கூட்டணியை தொடர்ந்து இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ளார். இப்படம் சிம்புவின் 49வது படமாகும். க்ரைம், திரில்லர் ஜானரில் உருவாகி வரும் இப்படத்தில், பல வருடங்களுக்கு பின் சிம்புவுடன் சந்தானம் கூட்டணி அமைத்துள்ளார். இப்படத்தின் தயாரிப்பாளர் ED விசாரணை வளையத்தில் சிக்கியுள்ளதால் இப்படத்தின் படப்பிப்பு தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
சிம்புவின் 49வது படத்தை தொடர்ந்து 50வது படத்தை இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இயக்கவுள்ளார். இவர் 'கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தல்' படத்தை இயக்கி வெற்றி கண்டவர். இப்படத்தை சிம்புவே தயாரிக்கவுள்ளார், இதன் மூலம் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர் அவதாரம் எடுக்கவுள்ளார். மேலும் இப்படத்தில் சிம்பு திருநங்கை கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.
டிராகன் பட வெற்றியை தொடர்ந்து அஸ்வத் மாரிமுத்துவுக்கு டிமாண்ட் அதிகரித்துள்ளது. சிம்புவை வைத்து படம் இயக்கவுள்ளார் அஸ்வத். இப்படம் 2026 கோடைக்கால கொண்டாட்டமாக வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தக் லைஃப் பட தோல்வியை தொடர்ந்து மீண்டும் மணிரத்னத்துடன் கூட்டணி வைத்துள்ளார் சிம்பு. காதல் ரொமான்டிக் ஜானரில் கிட்டத்தட்ட 'விண்ணைத்தாண்டி வருவாயா' படத்தை போல் எதிர்பார்க்கலாம் என கூறுகின்றனர்.


Click it and Unblock the Notifications