மாதம்பட்டி ரங்கராஜின் இரண்டாவது திருமணம்.. முதல் மனைவி மற்றும் குழந்தைகளை பாத்துருக்கீங்களா? ஃபேமிலி போட்டோஸ்!
கேட்டரிங் தொழில் மூலம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் மாதம்பட்டி ரங்கராஜ். இவருக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கும் நிலையில் தற்போது ஆடை கலைஞர் ஒருவரை இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார். தற்போது இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் மாதம்பட்டி ரங்கராஜின் முதல் மனைவி யார் என்ற தேடல் இணையத்தளத்தில் அதிகமாகியுள்ளது. அந்த வகையில் ரங்கராஜின் ஃபேமிலி புகைப்படங்களை இந்த பதிவில் பார்ப்போம்.
சமையலில் ஆர்வம் காட்டிய ரங்கராஜ், நடிப்பிலும் ஆர்வம் காட்ட தொடங்கினார். அதன்படி மெஹந்தி சர்க்கஸ் மற்றும் பெண்குயின் ஆகிய படங்களில் ஹீரோவாக நடித்துள்ளார். பின்னர் நடிப்பில் இருந்து விலகிய ரங்கராஜ், தனது முழு கவனத்தை சமையல் பக்கம் திருப்பினார். பின்னர் என்ன செம வளர்ச்சி தான்.. தனது சொந்த ஊரின் பெயரை அடைமொழியாக வைத்துக்கொண்டார். அரசியல் பிரமுகர்கள் முதல் ஸ்டார் பிரபலங்களின் இல்ல விசேஷ நிகழ்ச்சிகளில் மாதம்பட்டி ரங்கராஜன் சமையல் தான்.
பிரபல சமையல் கலைஞராக வலம் வந்து கொண்டிருந்த மாதம்பட்டி ரங்கராஜ், குக் வித் கோமாளி நிகழ்ச்சியிலும் நடுவராக கலந்துகொண்டு ஃபன் செய்தார். அடுக்கடுக்கான வசனங்கள் பேசி ஆடியன்ஸை கவர் செய்த ரங்கராஜின் புகழ் குக் வித் கோமாளி மூலம் பட்டிதொட்டி எங்கும் பரவியது. அதிலும் குறிப்பாக அவர் அணிந்து வரும் ஸ்டைலான வித்தியாசமான ஆடை பலரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் இருக்கும். அவர் அணிந்து வரும் வித்தியாசமான ஆடைகளுக்கு காரணம் ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா தான். தற்போது இவரை தான் இரண்டாவதாக திருமணம் செய்துகொண்டார்.


Click it and Unblock the Notifications