தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கு: நகைகள் மீட்பு, குற்றவாளிகள் கைது.. இனி என்ன நடக்கும்?
மதுரை தனிஷ்க் நகைக்கடை கொள்ளை வழக்கில் குற்றவாளிகள் பிடிபட்டனர், நகைகளும் மீட்கப்பட்டது. இனி குற்றவாளிகளுக்கு என்ன நடக்கும் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
மதுரையில் புதிதாக திறக்கப்பட்ட தனிஷ்க் நகைக்கடையில் 15 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்கம் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த கொள்ளை சம்பவம் தமிழ்நாட்டையே அதிரவைத்தது. கொள்ளை வழக்கு தொடர்பாக போலீஸ் தீவிர விசாரணையில் ஈடுபட்டது. அதன்படி பெரும் ட்விஸ்ட்டாக இன்ஸ்ட பிரபலம் மீனாட்சி கைது செய்யப்பட்டார். பின்னர் அவரின் ஆண் நண்பர் நிதிஷை போலீஸ் வலைவீசி தேடி வந்தனர். பின்னர் தருமபுரியில் வைத்து போலீசார் நிதிஷை கைது செய்தனர். குற்றவாளிகள் பிடிபட்ட நிலையில் இனி இந்த கொள்ளை வழக்கில் என்ன நடக்கும் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துதல்: கைது செய்யப்பட்ட குற்றவாளிகளுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு 24 மணிநேரத்தில் மாஜிஸ்திரேட் முன் ஆஜர்படுத்தப்படுவர்.
போலீஸ் விசாரணை: மாஜிஸ்திரேட் முன் ஆஜர் படுத்தப்பட்ட நிதிஷுக்கு டிசம்பர் 1 வரை நீதிமன்ற காவல் விதிக்கப்பட்டது. கொள்ளையில் வேறு யாருக்காவது தொடர்பு இருக்கா? நகைகளை எப்படி கொள்ளையடித்தார்கள்? போன்ற போலீஸ் விசாரணைகள் நடத்தப்படும்.
நகைகளுக்கான ஆதாரம்: நிதிஷ், மீனாட்சியிடம் இருந்து மீட்கப்பட்ட 15 கிலோ தங்கம் தனிஷ்க் நகைக்கடைக்கு சொந்தமானது தானா? அதன் அடையாளம் சரிபார்க்கப்பட்டு கடையின் நகை தானா? இல்லையா? என உறுதிசெய்யப்படும்.
காவல் நீட்டிப்பு: டிசம்பர் 1ம் தேதி நிதிஷ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார். விசாரணை முடியவில்லை என்றால் நீதிபதி முன் போலீசார் காவல் நீடிப்புக்கு கோரிக்கை வைக்கலாம். நீதிபதி பரிசீலித்து காவல் நீடிப்புக்கு அனுமதி கொடுக்கலாம்.
ஜாமீன் மனு: நிதிஷ், மீனாட்சி ஜாமின் மனு தாக்கல் செய்யலாம். அதனை நீதிமன்றம் பரிசீலித்து அனுமதி கொடுக்கலாம், கொடுக்காமலும் போகலாம்.
குற்றப்பத்திரிகை தாக்கல்: குற்றவாளிகளிடம் போலீஸ் விசாரணை முடிந்ததும் போலீசார் சேகரித்த ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வர்.
நகை ஒப்படைப்பு: மீட்கப்பட்ட 15 கிலோ தங்கநகைகள் தனிஷ்க் நகைக்கடைக்கு சொந்தமானவையா என்பதை நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்படும்.
வழக்கு விசாரணை மற்றும் தீர்ப்பு: நீதிமன்றத்தில் வழக்கு விசாரிக்கப்பட்டு, ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு மற்றும் ஆதாரங்கள் ஆய்வு செய்யப்படும். இறுதியில் நீதிமன்றத்தால் தீர்ப்பு வழங்கப்படும்.



Click it and Unblock the Notifications