"தமிழ்நாட்டு மன்மதனே வாராய்".. தமிழ் பையனை கரம்பிடிக்கும் மலையாள நடிகை.. விரைவில் டும் டும் டும்.. யார் அந்த ஜோடி?
பிரபல மலையாள நடிகை அஞ்சு குரியன், தனது வருங்கால கணவரின் புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை அஞ்சு குரியன். 'நேரம்' படத்தின் மூலம் சினிமா ரசிகர்களிடையே பிரபலமானார்.
தொடர்ந்து வெவ்வேறு மலையாள படங்களில் நடித்து ஹிட் படங்கள் கொடுத்து தனக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கிக்கொண்டார். ஸ்டார் நடிகர்களுடனும் ஜோடியாக நடித்துள்ளார்.
மலையாள சினிமாவில் இருந்து அஞ்சு, 'சென்னை 2 சிங்கப்பூர்' என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். தொடர்ந்து ஜூலை காற்றில், இக்ளூ, சில நேரங்களில் சில மனிதர்கள், ஓஹோ எந்தன் பேபி, இதயம் முரளி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் இவர், இரண்டு வாரங்களுக்கு முன் அவரது காதலன் ப்ரொபோஸ் செய்த போட்டோக்களை இன்ஸ்டாவில் பகிர்ந்திருந்தார்.
ரோஷன் அஞ்சுவுக்கு மோதிரம் அணிவித்து ரொமான்டிக்காக ப்ரொபோஸ் செய்த போட்டோக்களை இன்ஸ்டாவில் பகிர்ந்திருந்தார்.
காதல் ஜோடியாக இருந்த அஞ்சு குரியன்-ரோஷன் ஜோடி திருமண நிச்சயதார்த்தம் செய்துகொண்டனர்.
இந்த நிலையில் தற்போது இருவரும் ஜோடியாக போட்டோஷூட் நடத்திய புகைப்படங்களை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார்.
அஞ்சு குரியனின் காதலர் தமிழ்நாட்டை சேர்ந்தவர் போல் தெரிகிறது. இருவரும் போட்டோஷூட் நடத்திய போட்டோக்களை "தமிழ்நாட்டு மன்மதனே வாராய்" என்ற பாடலுடன் அஞ்சு குரியன் தனது இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
இந்த நிலையில் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் விரைவில் கோலாகலமாக திருமணம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அஞ்சு குரியன்-ரோஷன் ஜோடியின் லேட்டஸ்ட் இன்ஸ்டா போட்டோஸ் சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.



Click it and Unblock the Notifications