Home / Photos
புற்றுநோயில் இருந்து மீண்டு ஃபிட்னஸ் ஃப்ரீக்காக மாறிய 'முதல்வன்' நாயகி.. 56 வயதில் எப்படி இருக்காருனு பாருங்க!
By Chandru
நடிகை மனிஷா கொய்ராலாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் சில சோசியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.
1/7
Photo Credit: instagram@manisha koirala
Share
நேபாளத்தை சேர்ந்தவர் நடிகை மனிஷா கொய்ராலா. அரசியல் குடும்பத்தை சேர்ந்த இவர், நேபாள சினிமா மூலம் தனது திரை பயணத்தை தொடங்கினார். அதன்பின்னர் ஹிந்தி திரையுலகத்தில் நாயகியாக என்ட்ரி கொடுத்தார்.
2/7
Photo Credit: instagram@manisha koirala
Share
ஹிந்தி சினிமாவில் தனக்கென தனி இடத்தை உருவாக்கிக்கொண்ட இவர், மணிரத்னம் இயக்கத்தில் வெளிவந்த 'பாம்பே' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகியாக என்ட்ரி கொடுத்தார். அறிமுகமான முதல் படமே இவரை மிகவும் பாப்புலராகியது. ஃபேன்ஸ் கூட்டத்தையும் உருவாக்கி கொடுத்தது.
3/7
Photo Credit: instagram@manisha koirala
Share
பாம்பே பட மெகா வெற்றியை தொடர்ந்து கமலின் இந்தியன், அர்ஜுனின் முதல்வன், ஆளவந்தான், ரஜினியின் பாபா, மீண்டும் கமலுடன் மும்பை எக்ஸ்பிரஸ் ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் நடித்த அனைத்தும் படங்களுமே ஹிட் அதுமட்டுமல்லாமல் ஸ்டார் நடிகர்களுக்கு மட்டுமே ஜோடியாக நடித்திருந்தார். இந்திய சினிமாவில் முக்கிய நடிகையாக பார்க்கப்பட்டார்.
4/7
Photo Credit: instagram@manisha koirala
Share
நீண்ட இடைவெளிக்கு பின் 2011ல் வெளிவந்த தனுஷின் 'மாப்பிள்ளை' படத்தில் மாமியார் ரோலில் நடித்து மாஸ் ரீ-என்ட்ரி கொடுத்தார். அதன்பின்னர் 2021ல் மனிஷாவுக்கு கருப்பை புற்றுபோய் இருப்பது கண்டறியப்பட்டது. பின்னர் நீண்ட போராட்டத்திற்கு பின் அதில் இருந்து மீண்டு வந்தார்.
5/7
Photo Credit: instagram@manisha koirala
Share
புற்றுநோயில் இருந்து மீண்டு வந்த மனிஷா, மீண்டும் செம ஆக்ட்டிவாக படங்களில் நடிக்கத் தொடங்கினார். மலையாளம், கன்னடம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் தொடர்ந்து நடித்து வருகிறார். நடிப்பில் பிஸியாக இருக்கும் இவர், சமீபகாலமாகவே ஃபிட்னஸ் ஃப்ரீக்காக இருந்து வருகிறார். நாள் தவறாமல் ஜிம் சென்று உடற்பயிற்சி மேற்கொண்டு வருகிறார்.
6/7
Photo Credit: instagram@manisha koirala
Share
தீவிர உடற்பயிற்சி மேற்கொண்டு உடலை செம ஃபிட்டாக வைத்துள்ளார். 56 வயதாகும் இவர், ஜிம்மில் வொர்கவுட் செய்யும் வீடியோஸ் மற்றும் போட்டோக்களை தொடர்ந்து இன்ஸ்டாவில் பகிர்ந்து வருகிறார்.
7/7
Photo Credit: instagram@manisha koirala
Share
56 வயதாகும் மனிஷாவா இது? இந்த வயதிலும் எவ்வளவு ஃபிட்டாக இருக்காங்க? என மனிஷாவின் வொர்கவுட் புகைப்படங்கள் மற்றும் ரீலிஸ் வீடியோக்களுக்கு கமெண்ட் செய்து வருகிறார். தற்போது மனிஷாவின் லேட்டஸ்ட் இன்ஸ்டாகிராம் போட்டோஸ் ரசிகர்களை ஆச்சரியப்படுத்தி சோசியல் மீடியாக்களில் செம வைரலாகி வருகிறது.



Click it and Unblock the Notifications