ஓடிடியில் வெளியாகும் செல்வராகவனின் 'மனிதன் தெய்வமாகலாம்'.. எதில்? எப்போது? பார்க்கலாம்!
இயக்குநரும், நடிகருமான செல்வராகவன் நடிப்பில் வெளிவந்த 'மனிதன் தெய்வமாகலாம்' திரைப்படம் ஓடிடி ரிலீசாகவுள்ளது. எப்போது? எந்த ஓடிடியில் பார்க்கலாம்? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
செல்வராகவன் படம்: இயக்குநர் டென்னிஸ் மஞ்சுநாத் இயக்கத்தில் செல்வராகவன், குஷி ரவி, மைம் கோபி, கௌசல்யா, ஆர் எஸ் சதீஷ் உள்ளிட்டோர் நடிப்பில் வெளிவந்த திரைப்படம் 'மனிதன் தெய்வமாகலாம்'. ரவி வர்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார், ஏகே பிரியன் இசையமைத்துள்ளார்.
கதை என்ன? சரியான சாலை வசதி இல்லாத குக் கிராமத்தில் வாழும் செல்வராகவன் அதே கிராமத்தில் வாழும் குஷி ரவியை காதலித்து திருமணம் செய்துகொள்கிறார். அந்த கிராமத்தில் நுங்கு வியாபாரம் செய்து பிழைப்பை நடத்திக்கொண்டிருந்த இவர், திருமணத்திற்கு பின் ஹோட்டல் பிசினஸ் செய்ய முடிவு செய்கிறார்.
காதலித்து திருமணம் செய்துகொண்ட மனைவியை ராணியாக வாழவைக்கவேண்டும் என்பதிற்காக ஹோட்டல் பிசினஸ் நடந்த முடிவு செய்யும் இவர், கடன் வாங்கி நெடுஞ்சாலையில் ஹோட்டல் ஒன்று நடத்துகிறார். மகிழ்ச்சியாக இருவரும் வாழ்ந்துகொண்டிருக்க திடீரென குஷி ரவி தற்கொலை செய்துகொள்கிறார்.
மனைவியின் திடீர் தற்கொலைக்கான காரணம் என்ன? செல்வராகவன் எடுக்கும் நடவடிக்கையில் கிராம மக்கள் அவரை சாமியாக பார்க்கின்றனர். அப்படி அவர் என்ன செய்தார்? இப்படியான கேள்விகளுக்கு விடை கொடுக்கிறது படத்தின் மீதி கதை.
ஓடிடி? தியேட்டரில் சுமாரான வரவேற்பு பெற்ற இப்படம், தற்போது ஓடிடி ரிலீசுக்கு தயாராகியுள்ளது. அந்த வகையில் இப்படம், வரும் ஜூன் 19ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீசாகவுள்ளது.


Click it and Unblock the Notifications