ஆரா பத்துக்கு பத்து".. ஓடிடியில் ரிலீஸாகும் ஹிப் ஹாப் ஆதியின் 'மீசைய முறுக்கு 2'.. எந்த ஓடிடி? எப்போது பார்க்கலாம்?
ஹிப் ஹாப் ஆதி நடிப்பில் வெளிவந்த 'மீசைய முறுக்கு 2' திரைப்படம் ஓடிடி ரிலீஸுக்கு தயாராகியுள்ளது. வாங்க எப்போது? எந்த ஓடிடி? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
2017ம் ஆண்டு வெளிவந்த 'மீசைய முறுக்கு' படத்தின் மூலம் இயக்குநராகவும், நாயகனாகவும் அறிமுகமானவர் ஹிப் ஹாப் ஆதி. இசையமைப்பாளராக இருந்து ஆதி, அப்படத்தின் மூலம் நாயகனாக புது அவதாரம் எடுத்தார்.
இயக்குநராகவும், ஹீரோவாகவும் முதல் படத்திலேயே வெற்றி கண்ட ஆதி, அடுத்தடுத்து பல படங்களில் நாயகனாக நடித்து வந்தார். அதில் ஹிட் படங்களும் உண்டு, ஃபிளாப் படங்களும் உண்டு. இருப்பினும் கோலிவுட் சினிமாவின் முக்கிய நடிகர்களால் ஒருவராக வலம் வருகிறார்.
'மீசைய முறுக்கு' செம ஹிட்டானதை தொடர்ந்து இரண்டாவது பாகம் ரசிகர்களின் எதிர்பார்ப்புடன் உருவானது. ஹிப் ஹாப் ஆதி, இயக்கி, நடித்து, இசையமைத்துள்ளார். நடிகை குஷ்பூவின் தயாரிப்பு நிறுவனம் உருவாக்கியது.
படம் தியேட்டரில் ரிலீஸாகும் முன்பே அப்படத்தின் ஆரா 10/10 என்ற பாடல் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானது, இளைஞர்களை துள்ளாட்டம் போடவைத்தது. இப்படம் ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புடன் கடந்த செப்டம்பர் 25ம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது.
வசூல்? தியேட்டரில் ரிலீஸான இப்படம், கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் கல்லாகட்டியது. 20 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி உலகளவில் சுமார் 51 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வசூல் செய்ததாக கூறப்படுகிறது.
ஓடிடி? தற்போது 'மீசைய முறுக்கு 2' ஓடிடி ரிலீஸக்கு தயாராகியுள்ளது. இப்படம் வரும் நவம்பர் 6ம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் ரிலீஸாகவுள்ளது. மக்களே இந்த தீபாவளி வீக் எண்டில் படத்தை பார்க்க மிஸ் பண்ணிடாதீங்க.



Click it and Unblock the Notifications