bredcrumb

தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு...! புதிய மேலடுக்கு சுழற்சி ஆரம்பம்!

By Chandru
| Published: Saturday, November 6, 2021, 18:05 [IST]
மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் மிதமான மழை முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு...! புதிய மேலடுக்கு சுழற்சி ஆரம்பம்!
1/9

2/9
தெற்கு ஆந்திரா- வட தமிழக கடலோர பகுதிகளை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 24 மணி நேரத்திற்கு வட தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு...! புதிய மேலடுக்கு சுழற்சி ஆரம்பம்!
3/9
மேலும் தென் தமிழகத்தில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு...! புதிய மேலடுக்கு சுழற்சி ஆரம்பம்!
4/9
கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன முதல் மிக கன மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு...! புதிய மேலடுக்கு சுழற்சி ஆரம்பம்!
5/9
கிருஷ்ணகிரி, தர்மபுரி சேலம், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், கரூர், திண்டுக்கல், தேனி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு...! புதிய மேலடுக்கு சுழற்சி ஆரம்பம்!
6/9

சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு...! புதிய மேலடுக்கு சுழற்சி ஆரம்பம்!
7/9
மேலும் சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 30 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும் என தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு...! புதிய மேலடுக்கு சுழற்சி ஆரம்பம்!
8/9
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வருகிற நவம்பர் 9 ம் தேதி ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது என தெரிவித்துள்ளனர். 
தமிழகத்தில் 6 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கு வாய்ப்பு...! புதிய மேலடுக்கு சுழற்சி ஆரம்பம்!
9/9
இந்நிலையில் ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் 9 ஆம் தேதிக்குள் கரைக்கு திரும்பி வருமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என வானிலை ஆய்வு மையம் கூறப்பட்டுள்ளது.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X