Home / Photos
திரிஷா, நயன்தாராவை விடுங்க.. அதிகம் லைக் செய்யப்பட்ட சீரியல் நடிகைகள் இவங்க தானாம்.. உங்களுக்கு பிடிச்சவங்க இதுல இருங்கங்களா?
By Chandru
சின்னத்திரையில் ரசிகர்களால் அதிகம் விரும்பப்படும் சீரியல் நடிகைகள் யார் யார் என்பது தனியார் நிறுவனம் ஒன்று பட்டியலிட்டுள்ளது. இந்த லிஸ்டில் எந்தெந்த நடிகைகள் இருக்கின்றனர் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
1/6
Share
வெள்ளித்திரை நடிகைகளை காட்டிலும் சின்னத்திரை நடிகைகளுக்கு மவுசு அதிகம் என்றே சொல்லலாம். தினந்தோறும் தொலைக்காட்சி வாயிலாக இல்லத்தரசிகளையும், இளைஞர்களையும் ஈர்த்து வரும் சீரியல் நடிகைகள் தங்களுக்கென தனி ரசிகர்கள் கூட்டத்தை உருவாக்கி வைத்துள்ளனர்.
2/6
Share
இருப்பினும் இதில் சில நடிகைகளுக்கு நயன்தாராவுக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டத்தை விட அதிகளவு ஃபாலோவர்ஸ் இருக்கின்றனர். அந்தவகையில் ரசிகர்களால் அதிகம் லைக் செய்யப்பட்ட சீரியல் நடிகைகளின் லிஸ்டை Ormax என்ற நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த லிஸ்டில் எந்தெந்த நடிகைகள் உள்ளனர் என்பதை இந்த பதிவில் பார்ப்போம்..
3/6
Share
இந்த லிஸ்டில் முதல் இடத்தில் இருப்பவர் கயல் சீரியல் நடிகை சைத்ரா ரெட்டி தான். தெலுங்கு சீரியல் நடிகையான சைத்ரா ரெட்டி தமிழில் பல சீரியல்களில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியிருப்பார். பின்னர் சன் டிவியின் கயல் சீரியலில் ஹீரோயினாக நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகிவிட்டார். சீரியல் பார்க்காத இளசுகள் கூட கயல் சீரியலை பார்க்க தொடங்கிவிட்டனராம். அதன்படி ரசிகர்களால் அதிகம் லைக் பண்ணப்படும் சீரியல் நடிகைகளில் முதல் இடத்தில் சைத்ரா ரெட்டி உள்ளார்.
4/6
Share
இந்த லிஸ்டில் இரண்டாம் இடத்தில் இருப்பவர் பாக்கியலட்சுமி சீரியல் நடிகை சுசித்ரா தான். இல்லத்தரசிகளின் ஃபேவரைட் சீரியலாக விஜய் டிவியின் பாக்கியலட்சுமி சீரியல் உள்ளது. இதில் பொறுப்புள்ள, தைரியமான பெண் கதாபாத்திரத்தில் நடித்து மக்களை ஈர்த்துவிட்டார். சீரியலுக்கு வரும் முன் சில படங்களில் சைடு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இருப்பினும் பாக்கியலட்சுமி சீரியலே இவரை மிகவும் பிரபலமாகியது.
5/6
Share
இந்த லிஸ்டில் மூன்றாம் இடத்தில் இருப்பவர் சுந்தரி சீரியல் நடிகை கேப்ரியல்லா செலஸ் தான். வெள்ளைத்திரையில் சில படங்களில் நடித்துள்ள கேபிரியல்லா சின்னத்திரையில் சுந்தரி சீரியல் மூலம் என்ட்ரி கொடுத்தார். அறிமுகமான முதல் சீரியலிலே மக்களின் மனதை வென்றுவிட்டார். ரசிகர்களால் அதிகம் விரும்பப்படும் நடிகைகளில் மூன்றாம் இடத்தில் உள்ளார்.
6/6
Share
இந்த லிஸ்டில் நான்காம் இடத்தில் உள்ளது சிங்கப்பெண்ணே சீரியல் நடிகை மனீஷா மகேஷ். இந்த சீரியலில் ஆனந்தி என்ற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார். கிராமத்து பெண் கதாபாத்திரத்தில் நடித்து பார்வையாளர்களின் விருப்பமான நடிகையாக மாறிவிட்டார். தற்போது இந்த லிஸ்டில் நான்காம் இடத்தில் உள்ளார்.


Click it and Unblock the Notifications