மக்களால் அதிகம் ரசிக்கப்படும் சீரியல்கள் என்னென்ன? உங்களுக்கு பிடிச்சது எது? டாப் 5 லிஸ்ட்!
தமிழக மக்களால் அதிகம் பார்த்து ரசிக்கப்படும் சீரியல்களில் என்னென்ன என்பதை இந்த பட்டியலில் பார்ப்போம்.
என்ன தான் விதவிதமான திரைப்படங்கள் வந்தாலும் சீரியல் மீதான மவுசு என்றும் குறைவதில்லை. இல்லத்தரசிகளை கவரும் விதத்தில் ஒவ்வொரு நாளும் விறுவிறுப்பு, பரபரப்பு குறையாமல் சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. சன் டிவி, விஜய் டிவி, ஜீ தமிழ் போன்ற தொலைக்காட்சி நிறுவனங்கள் போட்டிபோட்டு கொண்டு விதவிதமான சீரியல்களை களமிறக்கி பார்வையாளர்களை ஈர்க்க பெரிதும் முயற்சித்து வருகின்றனர். அதேபோல் திரைப்படங்கள் ஓடிடியில் வெளியாவது போல் சீரியல்களிலும் ஓடிடி தளங்களில் வெளியாகி அதிகப்படியான மக்களை ஈர்த்து வருகிறது. ஏகப்பட்ட சீரியல்களில் ஒளிபரப்பாகி வரும் நிலையில் அதில் சில சீரியல்கள் மட்டுமே பார்வையாளர்களால் அதிகம் லைக் செய்யப்படுகிறது. அப்படியாக பார்வையாளர்களை அதிகம் ஈர்த்த சீரியல்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
இல்லாதாரிகளின் மனதை கொள்ளையடித்த சீரியல்களின் பட்டியலில் முதல் இடத்தில் 'சிங்கப்பெண்ணே' உள்ளது. சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் அதிகப்படியான டிஆர்பி ரேட்டிங் பெற்று முதல் இடத்தில உள்ளது. சன் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களிலேயே அதிக ரேட்டிங் உடன் இத்தொடர் தொடர்ந்து முதல் இடத்தை பிடித்து வருகிறது.
இந்த பட்டியலில் இரண்டாம் இடத்தை சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'மூன்று முடுச்சு' சீரியல் உள்ளது. எப்போதும் முதல் இடத்தை பிடிக்கும் 'சிங்கப்பெண்ணே' தொடரை போல் தொடர்ந்து இரண்டாம் இடத்தில் 'மூன்று முடுச்சு' இருந்து வருகிறது.
முதல் இரண்டு இடத்தில் சன் டிவி சீரியல்கள் உள்ளதை தொடர்ந்து மூன்றாம் இடத்தை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சிறகடிக்க ஆசை' சீரியல் உள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் நம்பர் ஒன் சீரியலாக இருந்து வருகிறது.
அதனை தொடர்ந்து நான்காம் இடத்தை சன் டிவியின் 'எதிர்நீச்சல் 2' சீரியல் உள்ளது. முதல் பாகம் அமோக வரவேற்பு பெற்றதை தொடர்ந்து இரண்டாவது பாகமும் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்று வருகிறது.
ஐந்தாம் இடத்தையும் சன் டிவியின் 'கயல்' சீரியல் பிடித்துள்ளது. ஒரு காலத்தில் முதல் இடத்தை விட்டுக்கொடுக்காத சீரியலாக இருந்து வந்த கயல் தற்போது நான்காவது அல்லது 5ம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து பிற தொடர்கள் வரிசையில் உள்ளன.


Click it and Unblock the Notifications