OTT: 2025ல் கூகுளில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 வெப் சீரிஸ்.. எந்தெந்த ஓடிடியில் பார்க்கலாம்?
2025ம் ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட வெப் தொடர்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
கடந்தாண்டு வெளிவந்த வெப் தொடர் 'Landman'. இத்தொடரின் இரண்டாவது சீசன் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் கடந்த நவம்பர் மாதம் ரிலீஸாகி செம ஹிட்டானது. மேற்கு டெக்சாஸ் நகரில் இருக்கும் எண்ணெய் கிணறுகளை சுற்றி நடக்கும் கதைக்களம். இத்தொடர் கூகுளில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 பட்டியலில் 10ம் இடத்தை பிடித்துள்ளது.
சைக்கலாஜிக்கல் ஹாரர், திரில்லர், சயின்ஸ் பிக்ஷன் வெப் தொடர் 'Alien: Earth'. இத்தொடரின் முதல் சீசன் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ரிலீஸாகி நல்ல வரவேற்பு பெற்றது. முழுக்க முழுக்க ஏலியனை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இத்தொடர் கூகுளில் அதிகம் தேடப்பட்ட டாப் 10 பட்டியலில் 9ம் இடத்தை பிடித்துள்ளது.
ஆக்ஷன், திரில்லர் கதைக்களத்தில் வெளிவந்த மினி வெப் தொடர் 'American Primeval'. கடந்த ஜனவரி மாதம் நெட்பிளிக்ஸ் தளத்தில் ரிலீசான இப்படத்தை ஓடிடி பிரியர்களை அதிகம் ஈர்த்தது. IMDB தளம் இத்தொடருக்கு 8 ரேட்டிங் கொடுத்துள்ளது. அந்த வகையில் இத்தொடர் கூகுளில் அதிகம் தேடப்பட்ட பட்டியலில் 8ம் இடத்தை பிடித்துள்ளது.
டார்க் காமெடி, சயின்ஸ் பிக்ஷன், சைக்கலாஜிக்கல் டிராமா வெப் தொடர் 'Pluribus'. ஆப்பிள் டிவி தளத்தில் வெளியான இத்தொடர் கூகுளில் அதிகம் தேடப்பட்ட பட்டியலில் 7ம் இடத்தை பிடித்துள்ளது.
2021ல் இருந்து ஒளிபரப்பாகி வரும் காமெடி டிராமா வெப் தொடர் 'The White Lotus'. இத்தொடரின் மூன்றாவது சீசன் கடந்த பிப்ரவரி மாதம் ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ரிலீசானது. இத்தொடர் கூகுளில் அதிகம் தேடப்பட்ட பட்டியலில் 6ம் இடத்தை பிடித்துள்ளது.
2022ல் இருந்து ஒளிபரப்பாகி வரும் ரொமான்டிக் காமெடி வெப் தொடர் 'The Summer I Turned Pretty'. இத்தொடரின் மூன்றாவது சீசன் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீஸாகி அதிகப்படியான பார்வையாளர்களை ஈர்த்து வருகிறது. இத்தொடர் கூகுளில் அதிகம் தேடப்பட்ட பட்டியலில் 5ம் இடத்தை பிடித்துள்ளது.
2022ல் இருந்து ஒளிபரப்பாகி வரும் வெப் தொடர் Severance. சைக்கலாஜிக்கல் திரில்லர், மிஸ்ட்ரி, சயின்ஸ் பிக்ஷன் கதைக்களத்தில் வெளிவந்த இந்த வெப் தொடர் கூகுளில் அதிகம் தேடப்பட்ட பட்டியலில் 4ம் இடத்தை பிடித்துள்ளது.
சைக்கலாஜிக்கல் திரில்லர், கிரைம் கதைக்களத்தில் வெளிவந்த மினி வெப் தொடர் 'Adolescence'. ஆஸ்கர் விருது வென்ற இத்தொடர், நெட்பிளிக்ஸ் தளத்தில் ரிலீஸாகி அதிகப்படியான பார்வையாளர்களை ஈர்த்து வருகிறது. அதிகம் தேடப்பட்ட வெப் தொடர்களின் பட்டியலில் 3ம் இடத்தை பிடித்துள்ளது.
உலக பிரபலமான ஸ்குவிட் கேம் தொடரின் மூன்றாவது சீசன் கடந்த ஜூன் மாதம் நெட்பிளிக்ஸ் தளத்தில் ரிலீஸாகி அமோக வரவேற்பு பெற்றது. கூகுளில் அதிகம் தேடப்பட்ட வெப் தொடர்களின் பட்டியலில் 2ம் இடத்தை பிடித்துள்ளது.


Click it and Unblock the Notifications