Year Ender 2025: இந்தியளவில் அதிகம் பேசப்பட்ட தென்னிந்திய படங்கள்.. என்னென்ன? தமிழ் படம் பேசப்பட்டதா?
2025ம் ஆண்டில் இந்தியளவில் அதிகம் பேசப்பட்ட தென்னிந்திய படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
தெலுங்கில் வெளிவந்த தரமான காமெடி, திரில்லர் திரைப்படம் 'Su From So'. வயிறு வலிக்க சிரிக்கவைப்பதுடன் கொஞ்சம் திகிலூட்டும் இப்படம், அணைத்து மொழிகளிலும் செம ஹிட்டானது.
டீன் ஏஜ் இளைஞன் ஒருவனை பொய் வழக்கில் இருந்து காப்பாற்றும் வழக்கறிஞரின் கதை தான் Court - State Vs. A Nobody படத்தின் கதைக்களம். தெலுங்கில் வெளிவந்த இப்படம் ஹிந்தி சினிமா ரசிகர்களாலும் அதிகம் லைக் செய்யப்பட்டது. இப்படத்தை நெட்பிளிக்ஸ் தளத்தில் காணலாம்.
பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் 2025ம் ஆண்டின் தொடக்கத்தில் வெளிவந்த திரைப்படம் டிராகன். இப்படம் தென்னிந்தியா அளவில் மிகவும் பிரபலமானது. பிற மொழிகளில் ரீமேக் செய்யவும் வாய்ப்புள்ளதாம்.
அறிமுக இயக்குனரின் திரைப்படமான டூரிஸ்ட் ஃபேமிலி பெருமளவில் பேசப்பட்டது. தியேட்டரிலும் சரி, ஓடிடி தளத்திலும் சரி படம் செம ஹிட். தென்னிந்தியா மட்டுமல்லாமல் ஹிந்தியிலும் இப்படம் பிரபலமானது.
மலையாள சினிமாவை மட்டுமன்றி இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வாய்த்த திரைப்படம் 'லோகா சாப்டர் 1: சந்திரா'. மலையாளத்தில் அதிகம் வசூல் செய்த படமாக ஸ்டார் நடிகர்களின் படங்களை பின்னுக்கு தள்ளி முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளது. இப்படம் இந்தியளவில் பேசப்பட்டது.
2025ல் மலையாளத்தில் வெளிவந்த மற்றுமொரு சூப்பர் ஹிட் திரைப்படம் 'துடரும்'. மோகன்லால் நடிப்பில் வெளிவந்த இப்படம் மலையாளத்தில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் ஹிட்டானது. இப்படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் தளத்தில் காணலாம்.
பசில் ஜோசப் நடிப்பில் மலையாளத்தில் வெளிவந்த ஹிட் திரைப்படம் 'பொன்மேன்'. வித்தியாசமான கதைக்களத்தில் உருவான சூப்பர் ஹிட் திரைப்படம். இப்படம் பெருமளவில் பேசப்பட்டது.
இரவு நேரத்தில் ரோந்து பணிக்கு செல்லும் போலீஸ் அதிகாரிகளின் ஓர் பயணத்தை கூறும் திரைப்படம் 'ரோந்த்'. மலையாளத்தில் வெளிவந்த இப்படம், தென்னிந்தியாவில் மட்டுமல்லாமல் பிற மொழி ரசிகர்களாலும் அதிக ஈர்க்கப்பட்டது.


Click it and Unblock the Notifications