OTT: கடந்த வாரம் ஓடிடியில் கவனம் ஈர்த்த ஹிட் திரைப்படங்கள்.. எது டாப்? லிஸ்ட் இதோ!
கடந்த வாரம் ஓடிடியில் அதிகம் பார்க்கப்பட்ட திரைப்படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
கடந்த வாரம் ஓடிடி பிரியர்களால் கொண்டாடப்பட்ட திரைப்படங்களின் பட்டியலில் 5ம் இடத்தில் ராஷ்மிகாவின் 'தி கேர்ள் ஃப்ரெண்ட்' திரைப்படம் உள்ளது. ராஷ்மிகா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வெளிவந்த ரொமான்டிக் தெலுங்கு திரைப்படம் நெட்பிளிக்ஸ் தளத்தில் ரிலீஸானது. அந்தவகையில் இப்படம் கடந்த வாரம் சுமார் 15 லட்சம் வியூஸ் பெற்றுள்ளது.
துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்த பயோகிராஃபி திரைப்படம் 'காந்தா'. தியேட்டரில் சுமாரான வரவேற்பு பெற்ற இப்படம், நெட்பிளிக்ஸ் தளத்தில் ரிலீஸாகி அதிகப்படியான ஓடிடி பிரியர்களை ஈர்த்து வருகிறது. அந்தவகையில் இப்படம் கடந்த வாரம் சுமார் 17 லட்சம் வியூஸ் பெற்றுள்ளது.
தெலுங்கில் வெளிவந்த ஆக்ஷன், ரொமான்டிக் திரைப்படம் 'Andhra King Taluka'. திரைப்பட நடிகர் ஒருவரின் தீவிர ரசிகனை பற்றிய வாழ்க்கை கதை. நெட்பிளிக்ஸ் தளத்தில் ரிலீஸான இப்படம், கடந்த வாரம் சுமார் 18 லட்சம் வியூஸ் பெற்றுள்ளது.
நவாசுதீன் சித்திக், ராதிகா ஆப்தே நடிப்பில் ஹிந்தியில் வெளிவந்த கிரைம், திரில்லர் டிராமா திரைப்படம் 'Raat Akeli Hai: The Bansal Murders'. மர்மமான கொலை வழக்கை விசாரிக்கும் இன்ஸ்பெக்டர் ஜதில் யாதவ். விசாரணையில் வெளிவரும் உண்மைகள், ட்விஸ்ட் காட்சிகள் என்னென்ன என்பதே படத்தின் விறுவிறுப்பான கதை. நெட்பிளிக்ஸ் தளத்தில் ரிலீஸான இப்படம், கடந்த வாரம் சுமார் 20 லட்சம் வியூஸ் பெற்றுள்ளது.
ராஷ்மிகா நடிப்பில் வெளிவந்த காமெடி, ஹாரர் ஹிந்தி திரைப்படம் 'Thamma'. தியேட்டரில் ரிலீஸாகி நல்ல வரவேற்பு பெற்ற இப்படம், அமேசான் பிரைம் ஓடிடி தளத்திலும் ரிலீசானது. அந்த வகையில் இப்படம், கடந்த வாரம் சுமார் 35 லட்சம் வியூஸ் பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications