மவுசு குறையாத காந்தாரா.. ஓடிடியில் வியூஸ் வேட்டை நடத்திய திரைப்படங்களின் லிஸ்ட்!
கடந்த வாரம் ஓடிடி பிரியர்களை அதிகம் ஈர்த்த திரைப்படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
ஓடிடி பிரியர்களை அதிகம் ஈர்த்து வியூஸ் வேட்டை நடத்திய திரைப்படங்களின் பட்டியலில் 5ம் இடத்தில் 'The Bengal Files' திரைப்படம் உள்ளது. த்ரில்லான அரசியல் கதைக்களத்தில் உருவான இப்படம், ஜீ5 ஓடிடியில் ரிலீசாகி ஓடிடி பிரியர்களை ஈர்த்து வருகிறது. அந்த வகையில் இப்படம் கடந்த வாரம் சுமார் 12 லட்சம் வியூஸ் பெற்றுள்ளது.
வருண் தவான், ஜான்வி கபூர் நடிப்பில் ஹிந்தியில் வெளிவந்த ரொமான்டிக் திரைப்படம் 'Sunny Sanskari Ki Tulsi Kumari'. நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ரிலீசான இப்படம், அதிகப்படியான இளைஞர்கள் கூட்டத்தை ஈர்த்து வருகிறது. இப்படம் கடந்த வாரம் சுமார் 15 லட்சம் வியூஸ் பெற்றுள்ளது.
அக்ஷய் குமார் நடிப்பில் ஹிந்தியில் வெளிவந்த காமெடி கோர்ட் டிராமா திரைப்படம் 'Jolly LLB 3'. நெட்பிளிக்ஸ் தளத்தில் ரிலீசான இப்படம், ஒவ்வொரு வாரமும் டாப் 5 பட்டியலில் இடம்பிடித்துவிடுகிறது. அந்த வகையில் இப்படம் கடந்த வாரம் சுமார் 17 லட்சம் வியூஸ் பெற்றுள்ளது.
இந்த பட்டியலில் துருவ் விக்ரமின் பைசன், இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது. தியேட்டரில் நல்ல வரவேற்பு பெற்ற இப்படம், நெட்பிளிக்ஸ் தளத்திலும் ரிலீஸாகி அமோக வரவேற்பு பெற்று வருகிறது. இப்படம் கடந்த வாரம் சுமார் 23 லட்சம் வியூஸ் பெற்றுள்ளது.
தொடர்ந்து ஒவ்வொரு வாரமும் முதல் இடத்தை பிடித்து வரும் திரைப்படம் 'காந்தாரா சாப்டர் 1'. தியேட்டரில் மாபெரும் வசூல் வேட்டை நடத்திய இப்படம், அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் ரிலீஸாகி வியூஸ் வேட்டை வேட்டை நடத்தி வருகிறது. ஒவ்வொரு வாரமும் அதிகப்படியான ஓடிடி பிரியர்களை ஈர்த்து வரும் இப்படம், கடந்த வாரம் சுமார் 32 லட்சம் வியூஸ் பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications