OTT: ஓடிடி பிரியர்களை அதிகம் ஈர்த்த வெப் சீரிஸ்.. டாப் 5 பட்டியல் இதோ!
கடந்த வாரம் அதிக வியூஸ் அள்ளிய வெப் தொடர்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
ஹிந்தியில் வெளிவந்த ஹாரர், திரில்லர் வெப் சீரிஸ் 'Bhay: The Gaurav Tiwari Mystery'. மர்ம கொலை அதனை சுற்றி நடக்கும் சுவாரசியமான திகில் சம்பவங்கள் நிறைந்த கதைக்களம். அமேசான் பிரைம் எம்எக்ஸ் பிளேயர் ஓடிடி தளத்தில் ரிலீசான இத்தொடர் கடந்த வாரம் 11 லட்சம் வியூஸ் பெற்றுள்ளது.
மகாபாரதத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ஹிந்தி வெப் தொடர் 'Mahabharat - Ek Dharmayudh'. ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ரிலீசான இத்தொடர் கடந்த வாரம் 13 லட்சம் வியூஸ் பெற்றுள்ளது.
பாக்சிங் விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்ட ஹிந்தி வெப் தொடர் 'Aukaat Ke Bahar'. அமேசான் பிரைம் எம்எக்ஸ் பிளேயர் ஓடிடி தளத்தில் ரிலீசான இத்தொடர் கடந்த வாரம் 20 லட்சம் வியூஸ் பெற்றுள்ளது.
2019ல் இருந்து ஒளிபரப்பாகி வரும் வெப் தொடர் 'The Family Man'. ஓடிடி பிரியர்களை அதிகம் ஈர்த்த இத்தொடரின் மூன்றாவது சீசன் அமேசான் பிரைம் ஓடிடி தலத்தில் ரிலீஸாகி அமோக வரவேற்பு பெற்று வருகிறது. அந்த வகையில் இத்தொடர் கடந்த வாரம் 30 லட்சம் வியூஸ் பெற்றுள்ளது.
உலக பிரபலமான ஹாலிவுட் வெப் தொடர் 'Stranger Things'. இத்தொடரின் முதல் நான்கு சீசன் அமோக வரவேற்பு பெற்ற நிலையில் 5வது சீசன் நெட்பிளிக்ஸ் தளத்தில் ரிலீசாகி ஓடிடி பிரியர்களை அதிகம் ஈர்த்து வருகிறது. ஒவ்வொரு வாரமும் தொடர்ந்து முதல் இடத்தை பிடித்து வருகிறது. அந்த வகையில் இத்தொடர் கடந்த வாரம் 48 லட்சம் வியூஸ் பெற்றுள்ளது.


Click it and Unblock the Notifications