ஓடிடியில் கடந்த வாரம் அதிக வியூஸ் அள்ளிய திரைப்படங்கள்.. பட்டியலில் இடம் பிடித்த 'டிஎன்ஏ'!
ஒவ்வொரு வாரமும் கடந்த வாரம் ஓடிடியில் அதிக வியூஸ் அள்ளிய திரைப்படங்களின் பட்டியலை பார்த்து வருகிறோம். அந்த வகையில் கடந்த வாரம் ஜூலை 21 முதல் 27 வரை ஓடிடியில் அதிக பார்வையாளர்களை ஈர்த்த திரைப்படங்கள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.
இயக்குநர் நெல்சன் வெங்கடேஷன் இயக்கத்தில் அதர்வா, நிமிஷா சஜயன் நடிப்பில் வெளியான திரைப்படம் 'டிஎன்ஏ'. குழந்தை கடத்தல் மற்றும் அதனை சுற்றி நடக்கும் சுவாரசிய திரில்லர் க்ரைம் கதைக்களம் இப்படத்தின் விறுவிறுப்பான கதை. அதர்வாவுக்கு செம கம்பேக் கொடுத்த இப்படம், வெறும் 6 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி 9 கோடி ரூபாய்க்கும் மேல் வசூல் செய்து ஹிட்டாகியுள்ளது. ஜூலை 19ம் தேதி ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ரிலீசான இப்படம் கடந்த வாரம் 13 லட்சம் பார்வையாளர்களை ஈர்த்து இந்த பட்டியலில் 5ம் இடத்தை பிடித்துள்ளது.
மாதவன், பாத்திமா சனா ஷேக் நடிப்பில் ஹிந்தியில் வெளிவந்த திரைப்படம் Aap Jaisa Koi. ரொமான்டிக் கதைக்களத்தில் வெளியான இப்படம் தொடர்ந்து இரண்டு வாரங்களுக்கு மேல் டாப் 5 பட்டியலில் பிடித்து வருகிறது. நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ஒளிபரப்பாகி வரும் இப்படம் கடந்த வாரம் 20 லட்சம் பார்வையாளர்களை ஈர்த்து இந்த பட்டியலில் 4ம் இடத்தை பிடித்துள்ளது.
மலையாளத்தில் சக்கைபோடு போட்டு வரும் த்ரில் திரைப்படம் ரோந்த். காவலர்களின் இரவு நேர ரோந்த் பணியில் அவர்கள் சந்திக்கும் சிக்கல்கள் என்னென்ன என்பதை த்ரில் கலந்து இயக்கியுள்ளார் இயக்குநர். ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியான இப்படம் மலையாளத்தில் மட்டுமல்லாமல் தமிழ் ஆடியன்ஸையும் ஈர்த்து வருகிறது. கடந்த வாரம் 24 லட்சம் பார்வையாளர்களை ஈர்த்து இந்த பட்டியலில் 3ம் இடத்தை பிடித்துள்ளது.
தொடர்ந்து இரண்டாவது வாரமாக டாப் 5 பட்டியலில் இடம் பிடித்து வருகிறது தனுஷின் குபேரா. கலவையான விமர்சனங்களுடன் தமிழ் மற்றும் தெலுங்கு ஆடியன்ஸை ஈர்த்து வந்த இப்படம், கடந்த ஜூலை 18ம் தேதி அமேசான் பிரைம் ஓடிடியில் ரிலீசானது. இப்படம் கடந்த வாரம் 37 லட்சம் பார்வையாளர்களை ஈர்த்து இந்த பட்டியலில் 2ம் இடத்தை பிடித்துள்ளது.
இறுதியாக, நடிகர் பிரித்விராஜ், கஜோல், இப்ராஹிம் அலி கான் உள்ளிட்டோர் நடிப்பில் ஹிந்தியில் வெளியான திரைப்படம் 'Sarzameen'. தாய் நாட்டுக்காக போராடும் ராணுவ வீரர்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படமாகும். ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடியில் வெளியான இப்படம் கடந்த வாரம் 45 லட்சம் பார்வையாளர்களை ஈர்த்து இந்த பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது.


Click it and Unblock the Notifications